நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒழிக்க பி.ஜே.பி. முயற்சிப்பதா? கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

2 Min Read

அரசியல்

சென்னை, அக். 3 – இந்தியா கூட்டணியின் சார்பில் வருகின்ற 14ஆம் தேதி மகளிர் மாநாடு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக் கிறது. இதற்கான ஏற்பா டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண் டாடடும் வகையிலும், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பற்றி பேசுவதற் காக இந்த நாட்டில் பெண்களுக்கு இருக்கக் கூடிய நிலைகளை குறித்து பேசுவதற்காக வருகின்ற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி இந்திய கூட்டணியில் இருக்கக்கூடிய முக்கிய மான பெண் தலைவர்கள் இந்த மாநாட்டிலே கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, பிரி யங்கா காந்தி, திரிணா முல் காங்கிரசில் சுப்ரியா சுலே மற்றும் பல்வேறு பெண் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

மகளிர் உரிமை மாநாடு என்பதால் பெண் தலைவர் கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்கள். இதில் முதலமைச்சர் மட்டும் கலந்து கொள்வார். இந் திய கூட்டணியை பொருத்தவரை முதல மைச்சர் அவர்களின் பங் களிப்பு என்பது மிக முக்கியமாக பார்க்கப்படு கிறது.

இந்த கூட்டம் இங்கு முதன்முதலாக நடை பெறுகிறது. நிச்சயமாக மிக பெரிய கவனத்தைப் பெறக்கூடிய கூட்டமாக இருக்கும்.

33% சதவிகித பெண் கள் இட ஒதுக்கீடு சட் டத்தை மட்டும் கொண்டு வந்துவிட்டு, அது என்று நடை முறைக்கு வரும் என்று தெரியாத நிலையில் இருக்கிறது. 

இன்னும் 25 ஆண்டு கள் ஆனாலும் அடுத்து வரும் பல தேர்தலுக்கு பிறகு கூட இது அமலுக்கு வருமா என்று சந்தேக மாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய மற்ற கட் சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எப்படி கொச்சைப்படுத்த வேண் டுமோ அப்படி எல்லாம் செய்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் யார் அங்கு குரல் கொடுத் தாலும் அவர்களை பேச விடாமல் செய்கிறார்கள். 

ஒன்றிய அரசு எதை யும் விவாதிக்க விடாமல் யாரையும் பேச முடியாது சூழ்நிலையை தான் தொடர்ந்து செய்து வரு கிறார்கள்.

ஆகவே வருகின்ற காலத்தில் நாடாளுமன் றத்தில் பாஜகவை முற்றி லுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கும் என்றார் அவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *