ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அட்வான்ஸ்டு சென்டர் பார் டிரீட்மென்ட், ரிசர்ச் & எஜூகேசன் இன் கேன்சர் (ACTREC)
நிறுவனத்தில் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நர்ஸ் 25, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, இன்ஜினியர் 1, மெடிக்கல் பிசிஸ்ட் 1, டெக்னீசியன் 5, கிளார்க் 3 உட்பட மொத்தம் 45 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / அய்.டி.அய்., / பி.இ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 7.3.2024
அடிப்படையில் டெக்னீசியன், கிளார்க் 27, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 30, மற்ற பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / திறன் தேர்வு / நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 7.3.2024