ராமன் விளைவு என்று போற் றப்படும் சர்.சி.வி. ராமன் சிந் தனை எப்படிப்பட்டது? இது குறித்து பிரபல பொதுவுடைமை வாதி ஏ.எஸ்.கே. பின்வருமாறு கூறுகிறார். “முதல் மனிதன் ககாரின் 1962 இல் விண்வெளி அகண்ட காஸ்மாஸில் சென்றதை விஞ்ஞானியாக இருந்தும் கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர் சி. ராமன் அவர்கள் அழுத்தமாக கண்டித் தார். கடவுள் வசிக்கும் இடத்தில் மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிக பாவம் செய்வதாகும் என்றார். அறிஞர் என்ற பட்டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணம் கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்கள் நிலையை நான் சொல் லித்தான் தெரிய வேண்டியது இல்லை. கூறாமலே அது விளங்கும்” ஆதாரம்: ஏ.எஸ்.கே எழுதிய “கடவுள் கற்பனையே, புரட்சிகர மனித வரலாறு” நூலின் முன்னுரையில்!