ரயில்வே துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார அமைப்பான ரயில்வே வாரியத்தின் தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் ஜெயா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 1905இல் அமைக் கப்பட்ட ரயில்வே வாரியத்தின் 118 ஆண்டு கால வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்கிற பெரு மையை ஜெயா பெற்றுள்ளார். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர், 1988இல் ரயில்வே துறையில் பணியில் சேர்ந்த இவர் வடக்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே ஆகிய மூன்று மண்டலங்களிலும் பணிபுரிந்துள் ளார். அக்டோபர் 1 அன்று பணி நிறைவு பெறவிருந்த நிலையில் ரயில்வே வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார். இந்தப் பதவியில் ஓராண்டுக்கு இவர் நீடிப்பார். ஒடிசாவின் பாலா சோர் மாவட் டத்தில் 291 பேரைப் பலி வாங்கிய கோர ரயில் விபத்து குறித்த தகவல்களை ஊடகங் களுக்கு விளக்கியதில் ரயில்வே யின் முகமாகச் செயல்பட்டார். வங்க தேசத்தின் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ரயில்வே ஆலோசகராக இவர் பணியாற்றியபோதுதான் கொல் கத்தா – டாக்கா இடையி லான மைத்ரி ரயில் சேவை தொடங்கப்பட்டது.