மனுதர்ம புத்திதானே…?
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல் புகார்கள் இல்லாத காரணத்தால், பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில் ஈ.டி., அய்.டி., நடவடிக்கை எடுக்கவில்லை.
‘துக்ளக்’, 6.3.2024
>> பி.ஜே.பி. ஒன்றிய அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறியிருக்கிறதே, அது ஊழல் இல்லையா? ‘ஒரு குலத்துக்கொரு நீதி’ என்கின்ற மனுதர்ம புத்திதானே இதற்குக் காரணம்.
தெரிவிக்கவில்லையே!
* தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.,க்களை அனுப்புவது உறுதி.
– தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை
>> தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.,க்கள் போவது உறுதிதான். ஆனால், எந்தக் கட்சியிலிருந்து என் பதை அண்ணாமலை தெரிவிக்கவில்லையே!
கேட்டிருக்கலாமே!
* மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள விதி மீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன?
– உயர்நீதிமன்றம் கேள்வி
>> அரசு இடங்களிலும், பொது இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோவில்கள்மீது எடுக்கப்படும் நட வடிக்கை என்ன? என்ற கேள்வியையும் கேட்டிருக் கலாமே!
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment