26-2-2024 மாலை சென்னை மயிலாப்பூர், இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் சிலையின் தலையில் பூவை சுற்றியும் நெற்றியில் பட்டை அடித்தும் மத சாயம் பூசி சமூகவிரோதிகள் திருவள்ளுவர் சிலையை களங்கப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மயிலாப்பூரில் உள்ள காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.
திருவள்ளுவர் சிலை நெற்றியில் பட்டையடிப்பு
Leave a Comment