ராமேசுவரம்,பிப்.28- இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி மீனவர் காங்., கட்சியினர் ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு 6 மாதம், ஓராண்டு, 2 ஆண்டு என இலங்கை நீதிமன்றம் தண்டனை விதித்ததால் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இச் சம்பவம் தமிழ்நாடு மீனவர்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீனவர்களை மீட்கா மல் அலட்சியமாக உள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று (27.2.2024) மீனவர் காங்., கட்சியினர் பாம்பன் கடலில் இறங்கி ஆர்ப் பாட்டம் செய்தனர். அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை வகித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கருமாணிக்கம் சட்டமன்ற உறுப் பினர் மாநில மீனவர் காங்., செயலாளர் ஜோர்தன், ராமநாதபுரம் மாவட்ட காங்., பொருளாளர் ராஜாராம் பாண் டியன், மேனாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ராமேஸ்வரம் நகர் தலைவர் ராஜீவ்காந்தி, மேனாள் நகர் தலைவர் பாரிராஜன், பாம்பன் ஊராட்சி முன்னாள் தலைவர் பேட்ரிக், கடலாடி வட்டார காங்., தலைவர் சுரேஷ்காந்தி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசை கண்டித்து பாம்பன் கடலில் இறங்கி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Leave a Comment