உரத்தநாடு, பிப். 27- கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தை செயலாக்கும் வகையில் 20-.2-.2024 செவ் வாய் அன்று மாலை உரத்தநாடு வடக்கு ஒன்றிய,நகர திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் உரத்தநாடு பேருந்து நிலையம், பெரியார் படிப்பகம் அருகில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்பது நாட்டின் ஒற்றுமைக்கு பேரா பத்தே என்னும் தலைப்பில் பரபரப்பான வழக்காடு மன்றம் நடைபெற்றது
உரத்தநாடு நகர இளைஞரணி தலை வர் பொறியாளர் ச.பிரபாகரன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்பிரமணியன், உரத்தநாடு நகர தலைவர் பேபி.ரெ.இரவிச்சந்திரன் உரத்த நாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார், உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, திரு வோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசி ளங்கோ, உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமரவேல் ஆகியோர் முன் னிலையேற்று உரையாற்றினர்.
மாநில இளைஞரணி துணை செய லாளர்கள் முனைவர் வே.இராஜவேல், இரா.வெற்றிக்குமார் ஆகியோர் அறிமுக வுரையாற்றினர். தஞ்சை மாவட்ட இளை ஞரணி செயலாளர் பேபி ரெ.இரமேஷ் தலைமையேற்று உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அரு ணகிரி, தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் தொடக்கவுரை யாற்றினர். தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
“ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்பது நாட்டின் ஒற்றுமைக்கு பேரா பத்தே!” என்கிற தலைப்பில் நடைபெற்ற பரபரப்பான வழக்காடு மன்றத்தில் கழக பேச்சாளர் பூவை.புலிகேசி வழக்கு தொடுத்து உரையாற்றினார். கழக பேச்சா ளர் இராம.அன்பழகன் வழக்கை மறுத்து உரையாற்றினார். கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் வழக்காடு மன்றத்தின் நடுவராக இருந்து அரசமைப்பு சட்டப் படியும், பல்வேறு பண்பாடு கலாச்சாரமிக்க மாநிலங்களில் வாழும் மக்களின் ஒற்று மைக்கு இந்த ஒரே நாடு ஒரே மொழி ஒரே தேர்தல் என்பது பேராபத்தே என்று தீர்ப்பு வழங்கி உரையாற்றினார்.
மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி நிகழ்வினை ஒருங்கிணைத்து இணைப்புரை வழங்கினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் பேரா.சுடர் வேந்தன் அவர்களின் மந்திரமா? தந்தி ரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர் பொன் னரசு கழக பாடல்களை பாடினார் இறுதி யாக ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு நன்றியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப் பாளர் பி.பெரியார்நேசன், பெரியார் சமூக காப்பணி இயக்குனர் தே.பொய்யாமொழி, மாவட்ட இணை செயலாளர் தீ.வ.ஞானசிகாமணி பொதுக்குழு உறுப் பினர் கு.ஜெயமணி, மாவட்ட கலை இலக் கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, திருவோணம் ஒன்றிய செயலாளர் சில்லத் தூர் வீர.சிற்றரசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கோ.ராம மூர்த்தி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ. நாராயணசாமி மாவட்ட கலை இலக்கிய அணிசெயலாளர் பேராசிரியர் ந.எழில், தஞ்சை மாநகர துணை தலைவர் செ.தமிழ்செல்வன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் இரா.சரவணக்குமார், மாவட்ட ப.க. இணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் கு.நேரு, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ரெ.சசிகுமார், உரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், உரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.இரஞ்சித்குமார், உரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் இரா.இராஜதுரை, உரத்தநாடு தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் ம.மதியழகன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் மு.செந்தில்குமார், உரத்தநாடு நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரடீஸ், உரத்தநாடு நகர துணை தலைவர் மு.சக்திவேல், உரத்தநாடு தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் மா.கவுதமன், தஞ்சை தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆ.இரமேஷ், நெடுவாக்கோட்டை வெ.விமல், பெரியார் பிஞ்சு வி.புதியவன், தெற்கு நத்தம் அன்ப ழகன், வேம்பையன், தங்கையன், பகுத்தறி வாளர் கழக தோழர்கள் ந.காமராஜ், கக்கரைக்கோட்டை வீர.இளங்கோவன், வடசேரி கிளைக் கழகத் தலைவர் ராம சாமி, தஞ்சை இபி காலனி பகுதி தலைவர் மண்டலக்கோட்டை சூரியமூர்த்தி, புதிய பேருந்து நிலையம் பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், கண்ணந்தங்குடி கீழையூர் கிளைக் கழக தலைவர் இரா.செந்தில்குமார், தஞ்சை ஒன்றிய பகுத்த றிவாளர் கழக செயலாளர் இரா.வீரக் குமார், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் கருவாக்குறிச்சி தங்க.பிச்சைக்கண்ணு, நாகப்பட்டினம் நகர அமைப்பாளர் ரவி, பூதலூர் சகாயமேரி, அறிவு வழி காணொளி தாமோதரன், திருவையாறு கவுதமன் பெரியார் பெருந்தொண்டர்கள் சேது ராயன் குடிக்காடு மா.இராசப்பன், நெடு வாக்கோட்டை தோ.தம்பிக்கண்ணு, காவாரப்பட்டு கே .வி தர்மராஜன், ஒக்கநாடு கீழையூர் மா.அஞ்சம்மாள்.
பட்டுக்கோட்டை மாவட்ட கழக தோழர்கள்
பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவவர் ரத்தினசபாபதி , ப.க. மாவட்ட செயலாளர்,புலவஞ்சி காமராஜ் பட்டுக் கோட்டை நகர தலைவர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி ரெங்கசாமி,
திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள்
ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல.இரமேஷ், தெற்கு ஒன்றிய செயலா ளர் முருகையன், மாவட்ட தி.மு.க இளை ஞரணி துணை அமைப்பாளர் மு.கா.கார்த்தி, ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற மேனாள் தலைவர் சேக்தாவூத் சேக்.முகமது கனி, ஒரத்தநாடு 3ஆவது வார்டு உறுப்பினர் கமலக்கண்ணன், தெலுங்கன் குடிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி, பாலமுத்தூர் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபாபு ,சோயா ராஜேந்திரன், சேதுராயன்குடிக் காடு மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், விவசாய சங்கத் தலைவர் கக்கரை சுகுமாரன் மற்றும் கழக பொறுப் பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் ஏரா ளமானோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.
நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் வகை யில் நகரம் முழுவதும் கழகக் கொடிகள் பட்டொளி வீசின. விளம்பரப் பதாகைகள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.