500 மின்சாரப் பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, பிப். 27- 500 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப் படுகின்றன. 32 டிப்போக்கள் மூலம் கையாளப்படும் இந்த பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளுக்கு நாள் சென்னையில் போக்கு வரத்து தேவையும் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப் பட்டுள்ளதால், சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகளின் தேவையை போக்குவதற்காக கூடுதல் பேருந்துகள் வாங்குவதற்கும், மாநகர பேருந்து கழகத்தின் கீழ் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போக்கு வரத்துக் கழகம் மேற்கொண்டு வந்தது.
அந்த வகையில் புதிதாக மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்துக்கு கழகம் திட்டமிட்டது. அந்த வகையில், முதல்கட்டமாக 100 மின்சார பேருந்துகளுக்கு ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரியுள்ளது. அந்த வகையில், மின்சார பேருந் துகள் இயக்கம், பராமரிப்பு பணி மேற்கொள்ள தகுதியான நிறுவனங்கள் ஒப்பந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *