ஓட்டுரிமை இன்னதென்றும், அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் பாமர மக்களுக்கு ஒரு சிறிதும் கற்பிக்காமலும், கற்பிக்கக் கவலை கொள்ளாமலும் இருந்து கொண்டு அவர்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக் கொடுப்பதால் இந்த நாட்டுக்கு என்ன பலன் கிடைக்கக் கூடும்? பாமர மக்களை ஏய்க்கவும், அவர்கள் கையைக் கொண்டே கண்ணைக் குத்திக் கொள்வதற்கும் உதவுமேயல்லாமல் வேறு என்ன பலன் ஏற்படும்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’