காரைக்குடி, பிப். 27 – கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு கிராம மக்கள் சார்பில பெரியார் பெருந்தொண்டர் பொ.க.வெள்ளைச்சாமி-பேச் சியம்மாள் நினைவு கல் இருக்கை திறப்பு விழா கிராமத் தலைவர் மாயழகு முத்தழகு, வெள்ளைச்சாமி பூவேந்திரன், சொக்கலிங்கம், சர வணபாபு முன்னிலையில் நடை பெற்றது.
கி.சங்குநாதன் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவுப் படிப் பகம், பெரியார் நகர் திடலில் நடந் தது. கிராம மக்கள் பயன்பாட் டிற்காக ரூ.20 ஆயிரம் மதிப்பில் பயணிகள் அமரும் கல் இருக் கையை, காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி திறந்து வைத்து, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர், சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநா தன், காரைக்குடி என்.ஆர்.சாமி, கல்லல் இரா.சி.சதாசிவம், விசால யன்கோட்டை பெ.கு.ச.வேலு ஆகியோரின் அளப்பரிய கழகப் பணிகளை விளக்கிக் கூறினார்கள்.
இந்நிகழ்வில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய் யப்பட்டனர். மாவட்ட கழக தலை வர் ம.கு.வைகறை சிறப்புரையாற்றிய பின்னர் அனைவருக்கும் “உண்மை”, “பெரியார் பிஞ்சு” இதழ்களையும், கழக நூல்களையும் வழங்கியதோடு, 2024ஆம் ஆண்டு நாட்காட்டியும், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பாலமோகி அம்மை யாருக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட கழக செயலாளர் சி.செல்வமணி, பொதுக்குழு உறுப்பினர் செயா திராவிட மணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் இ.ப.பழனிவேலு, காரைக்குடி நகர கழக தலைவர் ந.செகதீசன், கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா விடம் அளித்த, தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டு வாழ்த்து மடலை படித்துக் காட்டி பங்கேற்றார்கள்.
ஆலம்பட்டு பெரியார் நகர் “பகுத்தறிவு படிப்பகத்திற்கு” ஓராண்டு விடுதலை நாளிதழ் சந்தா ரூ.2000அய், கழகத் தோழர் கி.சங்குநாதன் வழங்கினர்.
இவ் விழாவில் பொ.க.வெள் ளைச்சாமி, பேரன்களான சங்கு நாதன், பொன்னம்பலம் மற்றும் சத்யபிரகாஷ், கிராமத் தலைவர் மா.முத்தழகு, செயலாளர் சரவண பாபு, பூவேந்திரன், நா.பாலசுப்ர மணியம், சாம்ராஜ், விசுவநாதன், கணபதி, ஆறுமுகம், நித்தியராஜ், ராக்கம்மாள், சசிகலா பன்னீர் செல்வம், சங்கவி, ஆஸ்ப்ரோ கார்த்திக், பிரதீப் பன் னீர் செல்வம் உள்பட ஏராளமான கிராம மக் கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட கழக மகளிர் பாசறையின் இள.நதியா நன்றி கூறினார்.