பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி உல்லியக்குடி மு.ரெங்க சாமி அவர்களின் நூற்றாண்டு இன்று நிறை வடைகிறது.
1924 பிப்ரவரி 26 அன்று உல்லி யக்குடி என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். தமது பதின் பருவத் திலேயே தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று செயல் பட்டவர். 1948ஆம் ஆண்டு கும்ப கோணத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் அவரை மிகவும் ஈர்த்த போராட்டமாகும்.
அதன் பின் வகுப்புரிமைக்கான பேரணிகளில் பங்கேற்றவர். திரா விடர் கழகத்தை கிராமத்தில் தொடங்கி பகுத்தறிவுப் பிரச்சாரங் களை நடத்தியவர்.
1957 நவம்பர் 26 அன்று நடை பெற்ற அரசமைப்புச் சட்ட எரிப் புப் போராட்டத்தில் பங்கேற்று 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்.
வெளியில் வந்தவுடன் தமிழ் நாடு நீங்கிய தேசப்பட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
ஈழத்தமிழர் பிரச்சினைகளுக் காக ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எரித்து கைதானவர்.
மண்டல் குழு அறிக்கையை அமலாக்க இயக்கம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்.
1996 ஆம் ஆண்டு 69% இட ஒதுக்கீட்டின் பாதுகாப்பிற்கு தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்டு, தமிழ் நாடு சட்டமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட சட்டத்திற்கு தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜீவன் ரெட்டி, பரிபூர்ண அய்யங் கார் கொடும்பாவிகளைக் கொளுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டவர்.
அதன் பிறகும் தொடர்ச்சியாக கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று கைதானவர்.
தந்தை பெரியாரை அந்த குக்கிராமத்திற்கு மூன்று முறை அழைத்து கூட்டங்களை நடத்தி யவர். அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர், பட்டுக் கோட்டை இளவரி, துரை.சந்திர சேகரன், உள்ளிட்டவர்களை அழைத்து கூட்டங்களை நடத்தி யவர்.
உல்லியக்குடிக்கு பள்ளிக் கூடத் தைக் கொண்டுவந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.
ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டபோது ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந் தவர். இப்பகுதியில் பல ஆயிரக் கணக்கான சுயமரியாதைத் திரு மணங்களை நடத்தியவர்.
தா.பழூர் ஒன்றிய திராவிடர் கழத்தின் தலைவராக, உடையார் பாளையம் வட்டத் தலைவராக, அரியலூர் மாவட்டத் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர்.
அவருக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.