அறந்தாங்கி, அக்.3- அறந்தாங்கி கழக மாவட் டம் அத்தானி – திருவப்பாடியில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா வைக் கம் நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் எழுச்சியோடு நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவ பிரபாகரன் தலைமையில் மணல்மேல்குடி ஒன்றிய தலைவர் அ.நாகூரான் வரவேற்றார். மாவட்ட தலைவர் க.மாரிமுத்து மாவட்ட செயலாளர் முத்து ப.க. மாவட்ட செயலாளர் வீரையா ப.க. மாவட்ட துணை செயலாளர் அம்பிகாவதி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
கழகப் பேச்சாளர் மாங்காடு சுப.மணியர சன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் உரையில், இந்த சமூகத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், பெண் அடிமையற்ற சமத்துவ சமுதாயம் அமைவதற்காக இந்த இனத்திற்காக தந்தை பெரியார் 95 ஆண்டுகாலம் உழைத்த உழைப்பினையும், வைக்கம் போராட்ட வர லாற்றையும் எடுத்துரைத்தார். தந்தை பெரியாரின் இறுதி போராட்டமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ப தற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் சட்ட வடிவம் ஆக்கினார். பெரியார் நினைவு சமத் துவபுரங்கள் நாடு முழுவதும் உருவாக்கினார். அதேபோல் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி தந்தார். நம்முடைய தமிழ் சமூகம் உயர்வதற்காகவும் உயர்கல்வி வரை பயில்வதற்கு கட்டணம் இல்லாத வாய்ப்பினை உருவாக்கி தந்தார். இதேபோல் இன்றைய கால சூழ்நிலையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தந்தை பெரியாரின் வழியில் தடம் மாறாமல் தமிழகத்தை ஆட்சி செய்து கொண் டுள்ளார் என்பதையும், இந்தியா முழுவதிலும் இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் இவரை பார்த்தாலே அஞ்சி நடுங்கும் அளவிற்கு சரியான வழியில் திசையில் பயணிக்கிறார் என்பதையும் எடுத்துரைத்தார்.
பொதுமக்கள் பெருமளவில் திரண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறந்தாங்கி ஒன்றிய தலைவர் அத்தானி சிவசாமி ஏற்பாடு செய்து இருந்தார்.