25.2.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே டில்லி, குஜராத், அரியானா, கோவா, சண்டிகரில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது
♦ திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ அப்பாவி மக்கள் வீட்டை புல்டோசர் கொண்டு உ.பி. பாஜக அரசு இடித்துத் தள்ளுகிறது. ஆனால் குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர் என பிரியங்கா கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ஜனநாயகம், அரசியல் சாசனம் மற்றும் உண்மையைப் பாதுகாக்க ஊடகங்கள் தவறிவிட்டன என்று உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் கடுமையாக விமர்சனம்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ தெலங்கானாவுக்கு எதிராக மோடி அரசு பாரபட்சம். கும்பமேளாவுக்காக ரூ.100 கோடி ஒதுக்கும் மோடி அரசு, மேடாரம் ஜாதாராவில் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய பழங்குடியினரின் திருவிழாவான சம்மக்கா-சாரலம்மா ஜாதராவுக்கு ரூ.3.14 கோடி மட்டுமே ஒதுக்கி யுள்ளது என மோடி அரசை தெலங்கானா முதலமைச்சர் ஏ ரேவந்த் ரெட்டி சாடல்.
♦ போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பஞ்சாப்-அரியானா எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் மெழுகுவர்த்தி பேரணி நடத்தினர்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை மறியல் ஓயாது என விவசாயிகள் தலைவர் பாந்தர் தெரிவித்துள்ளார்.
♦ உத்தரப்பிரதேசத்தில் வினாத்தாள் கசிந்ததால் கடந்த 17, 18ஆம் தேதியில் நடந்த காவலர் தேர்வை ரத்து செய் வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 17, 18ஆம் தேதி காவலர் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் 48 லட்சம் இளைஞர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
– குடந்தை கருணா