சென்னை, பிப். 25- சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத் தமிழ்ப் பேரவை திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் 2022-ஆம் ஆண் டுக்கான விருதுகளை தமிழ றிஞர்களுக்கு 22.2.2024 அன்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
தமிழறிஞர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழ் அமைப்புகள் என 63 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருது களை தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமி ழுக்கும், தமிழ்மொழி, பண் பாட்டு வளர்ச்சிக்கும் தொண் டாற்றி வருவோருக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர், தமிழ்ச் செம்மல் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் 22.2.2024 அன்று நடைபெற்றது.
இதில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு தமிழறிஞர்கள், தமிழ் அமைப் புகளைச் சேர்ந்த 63 பேருக்கு விருதுகளை வழங்கினார்.
தமிழ்த் தாய் விருது- திருப் பூர் தமிழ்ச் சங்கத்துக்கு வழங் கப்பட்டது.
இத்துடன் விருதுத் தொகை ரூ. 5 லட்சம், கேடயம், தகுதி யுரை, பொன்னாடை ஆகி யவை வழங்கப்பட்டன.
இதையடுத்து சி.பா.ஆதித் தனார் திங்களிதழ் விருது – முல்லைச்சரம் இதழுக்கு (ஆசி ரியர் கவிஞர் பொன்னடியான்) வழங்கப்பட்டது. இத்துடன் விருதுத் தொகை ரூ. 2 லட்சம், கேடயம், தகுதியுரை, பொன் னாடை ஆகியவை வழங்கப்பட் டன.
கபிலர் – கம்பர் விருதுகள்:
கபிலர் விருது – முனைவர் அமிர்த கவுரி, உ.வே.சா விருது – நாறும்பூநாதன், கம்பர் விருது – மா.இராமலிங்கம், சொல்லின் செல்வர் விருது – முனைவர் தி. இராசகோபாலன், உமறுப் புலவர் விருது – முனைவர் பீ.மு. அஜ்மல்கான், இளங்கோவடி கள் விருது – கூ.வ.எழிலரசு, அம்மா இலக்கிய விருது – தி.பவளசங்கரி, சிங்காரவேலர் விருது – நா.சு.சிதம்பரம், அயோத்தி தாசப் பண்டிதர் விருது- வை. தேசிங்குராசன், மறைமலை யடிகளார் விருது – மருத்துவர் சு.நரேந்திரன், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் ப.சரவணன், காரைக் கால் அம்மையார் விருது – முனைவர் த.வசந்தாள், ஜி.யு. போப் விருது – முனைவர் அமு தன் அடிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
விருது பெற்ற இந்த 13 பேருக்கும் தகுதியுரை, பொன் னாடை, தலா ரூ. 2 லட்சம், தலா ஒரு பவுன் தங்கம் ஆகி யவை வழங்கப்பட்டன.
மொழி பெயர்ப்பாளர் விருது:
சிறந்த மொழி பெயர்ப்பா ளர் விருது சிவா பிள்ளை கணபதி பிள்ளை சிவகுருநாத பிள்ளை, பி.எஸ்.பி. குமாரசாமி, முனைவர் ப.சந்திரசேகரன், சுப்ரபாரதிமணியன், முனைவர் அ.ஸ்டீபன் அருள்ராஜ், அரு. சோமசுந்தரன், கவிஞர் மெய் ஞானி பிரபாகர பாபு, முது முனைவர் ஆ.இராச மாணிக் கம், கே.தட்சிணமூர்த்தி, புலவர் தி.வே.விஜயலட்சுமி ஆகிய 10 பேருக்கு வழங்கப்பட்டது. இத்துடன் விருதுத் தொகை தலா ரூ.2 லட்சம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்பட்டன.
38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது:
தமிழ்ச் செம்மல் விருது மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் மொத்தம் 38 பேருக்கு வழங் கப்பட்டன. இந்த விருதுடன் தகுதியுரை, விருதுத் தொகை தலா ரூ. 25,000 ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விழா வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறு வனர் வி.ஜி. சந்தோசம், தமிழ றிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.