சென்னை,பிப்.25 – தமிழ்நாடு – இலங்கை மீனவர்கள் பிரச் சினை தொடர்பாக மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-
பாக். நீரிணைப்பகுதியில் பன்னாட்டு கடல் எல்லையா னது இந்தியாவிற்கும் இலங் கைக்கும் இடையில் மிகவும் குறுகியதாக உள்ளது. பாக் வளைகுடா பகுதியில் குறிப் பாக இராமநாதபுரம் புதுக் கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங் களைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்களது படகு இயற்கை சீற்றம் மற்றும் இயந்திர கோளாறு போன்ற காரணங்களினால் பன்னாட்டு எல்லைக் கோட்டினைக் கடந்து செல்ல நேர்கிறது.
இந்நேர்வுகளில், தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரின் தாக்கு தலுக்கும் கைதுக்கும் உள்ளா கின்றனர்.
இலங்கை கடற்படையின ரால் தமிழ்நாடு மீனவர்கள் துன்புறுத்தப்படும்போதும் கைது செய்யப்படும்போதும் தமிழ்நாடு முதலமைச்சர் உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டி ஒன்றிய அரசின் பிர தமர் மற்றும் ஒன்றிய வெளியு றவு துறை அமைச்சர் ஆகி யோரை தொடர்ந்து வலியு றுத்தி வருகிறார்.
இவ்வாறான தாக்குதல் மற்றும் கைது சம்பவங்களில், ஒன்றிய அரசு தலையிட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுதலை செய் திட உரிய நடவடிக்கை மேற் கொள்ளவும் கேட்டுக் கொண் டுள்ளார்.
இலங்கை அரசு மீனவர் களை மட்டும் அவ்வப்போது விடுவித்துவிட்டு, படகுகளை நாட்டுடமையாக்கும் செயல் களை தொடர்ந்து செய்து வரு கின்றது. படகுகளை பறி கொடுத்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும்துயரத்திற்கு உள்ளா கின்றனர்.
தற்போதுவரை, இலங்கை சிறையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 49 மீனவர் களும் 151 மீன்பிடி படகுகளும் உள்ளன.
சிறைபிடிக்கப்பட்ட 151 பட குகளில் 12 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளது. இதில் மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளையும் மீட்டு தமிழ் நாடு கொண்டுவர தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த அக் டோபர் 2023இல் நிதி ஒதுக்கி மீட்புக்குழு அமைத்து ஆணையிட்டார்.
ஆனாலும், ஒன்றிய அர சானது தமிழ்நாட்டின் மீட்புக் குழு இலங்கைக்கு சென்று விடுதலை செய்யப்பட்ட படகுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனு மதியை இன்றுவரை வழங்க வில்லை. அதேபோல, தமிழ் நாடு இலங்கை மீனவர்களுக் கிடேயேயான பிரச்சினை களுக்கு தீர்வு காணும் பொருட்டு நடத்தப்படும்
இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டம் (Indo Srilankan Joint working committee meeting) 25.3.2022க்கு பின்னர் இதுவரை நடைபெறவில்லை.
இந்த கூட்டத்தை நடத்து வதற்கு நடவடிக்கை மேற் கொள்ள ஒன்றிய அரசை தமிழ் நாடு முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனாலும், தமிழ்நாடு மீன வர் பிரச்சினையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர் களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமா கவே செயல்பட்டு வருகிறது.
அரசியல் காரணங்களுக் காக மீனவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் ஒன்றிய அமைச் சர்கள் அவ்வப்போது இரா மேஸ்வரம் பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுத்தருவோம் என்று வாக்குறுதி தருவதும், பாரதிய ஜனதா கட்சியினர் மீனவ பிரதிநிதிகளை டில்லிக்கு அழைத்துச் சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க வைப் பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
ஆனால், சிறைபிடிக்கப் பட்டு இலங்கையில் உள்ள படகுகளை மீட்பதற்கு எந்த வொரு திடமான நடவடிக் கையும் ஒன்றிய அரசால் இதுவரை மேற்கொள்ளப்பட வில்லை என்பதே உண்மை. தமிழ்நாடு முதல்-அமைச்சர் இலங்கை அரசால் சிறைபிடிக் கப்பட்டு சேதமடைந்த 152 மீன்பிடி படகுகளுக்கு ரூ.6.84 கோடி நிவாரணமாக வழங்கி மீனவர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்துள்ளார்.
எனவே, தமிழ்நாட்டு மீன வர்களின் மேல் அக்கறை இல்லாத ஒன்றிய அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிப்பதற்கும் இலங்கை நீதிமன்றத்தால் விடு தலை செய்யப்பட்டு மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரு வதற்கு அமைக்கப்பட்ட மீட் புக்குழு இலங்கை செல்ல உட னடியாக அனுமதியும் வழங்க வேண்டும்.
அதேபோல, இந்திய இலங்கை கடற்பகுதியில் இருநாட்டு மீன வர்களும் அச்சமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட நெடுங் காலமாக நடத்தப்படாமல் இருக்கும் இந்திய – இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத் தையும் உடனடியாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.