சென்னை,பிப்.25 – தமிழ்நாட்டில் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப் பட்டது தொடர்பாக சட்டமன்றத்தில் 22.2.2024 அன்று உறுப்பினர்கள் எழுப் பிய கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது:-
கரோனா காலத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதற்கு கரோனா பரவல் மட்டும் காரணம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் போதிய ஓட்டு நர்கள், நடத்துநர்கள் இல்லாமல் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன.
தற்போது அரசு விரைவு போக்கு வரத்து கழகத்துக்கு புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு எழுத்துத் தேர்வு முடிவு பெற்றுள்ளது. நேர்காண லும் முடிந்துள்ளது. அவர்கள் விரை வில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
அடுத்ததாக மற்ற போக்குவரத்து கழகங்களுக்கும் ஓட்டுநர்கள், நடத்து நர்களை பணிக்கு எடுப்பதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய ஓட்டுநர்கள், நடத்து நர்கள் பணிக்கு எடுக்கப்பட்டு நிறுத்தப் பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந் துகள் இயக்கப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.