ஆந்திரா – விசாகப்பட்டினத்தில்
இந்திய நாத்திகர் சங்கத்தின் தலைவர்
ஜெயகோபால் நினைவேந்தல் – படத்திறப்பு
கழகப் பொதுச் செயலாளர்
வீ.அன்புராஜ் பங்கேற்பு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் 7.2.2024 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்வு 25.2.2024 (ஞாயிறு) அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறு கிறது. அந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கலந்துகொண்டு நினை வேந்தல் உரையாற்றுகிறார்.
நினைவேந்தல் நிகழ்வினையொட்டி டாக்டர் ஜெயகோபால் அவர்களது சமுதாயப் பணி, திராவிடர் கழகத்துடனான தொடர்பு பற்றி கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையின் ஒளி – ஒலிப் பதிவு அந்த நிகழ்வில் இடம் பெற உள்ளது.
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஜெ.ரவி, 15-609 சித்தார்த் நகர் காவல் நிலையம் அருகில், அறிலோவா, விசாகப்பட்டினம் – 530 040. செல்பேசி: 98660 78486.