அரசு பள்ளிகளிலேயே ஜாதி, வருமானச் சான்றிதழ் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

viduthalai
2 Min Read

கோவை, பிப். 24- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜாதி, வரு மானம் மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்கும் வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய `பெற் றோர்களைக் கொண்டா டுவோம்’ என்ற மாநாடு கோவையில் நேற்று (23.2.2024) நடைபெற் றது.
தலைமை வகித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில்” பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பட்ஜெட் டில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ரூ.1.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற் காக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் செயல்படுத் தப்படுகின்றன” என்றார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர்களுக்கு ஜாதி, வரு மானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் களை பள்ளிகளில் வழங் கும் வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு நிலம் நன் கொடை அளித்தவர் களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களை கவு ரவப் படுத்தி வருகி றோம்.
திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோவை மாவட் டங்களில் அரசுப் பள்ளி களுக்கு ரூ.448 கோடி மதிப்பில் நன்கொடை வழங்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.
நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக் கக் கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரி யர் சங்க மாநிலத்துணைத் தலைவர் வி.முத்துக் குமார் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆதார் பதிவு தொடக்கம்
கோவை காளப்பட்டி அரசு மேல் நிலைப் பள் ளியில் ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ என்ற சிறப்பு முகாமை அமைச்சர் அன் பில் மகேஸ் தொடங்கி வைத் தார்.
தொடர்ந்து, ஆதார் பதிவுச் சான்றுகளை மாணவர்களுக்கு வழங் கிய அவர், “வரும் மார்ச் 1-ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங் குகிறது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்தை செலுத்த வேண் டியது அவசியம்.
மாணவர்களுக்கு படிப்பில் ஏற்படும் சந் தேகங்கள் குறித்து ஆசிரி யர்களிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள் ளுங்கள். தேர்வுக்கு முதல் நாள் இரவு தூங்காமல், சாப்பிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டாம். தேர்வு குறித்து பயமோ, பதற் றமோ இருக்கக் கூடாது’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *