இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாயைக் கொண்டிருக்கின்ற சூழலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் ரூ. 45 ஆயிரம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்திருக்கின்றார்.
மாடிஃபிகேஷன் வாயிலாகவே அதனை அவர் சாத்தியப்படுத்தி இருக்கின்றார். அந்த நபர் மிகவும் சாதாரணமான கார் மாடல்களில் ஒன்றான மாருதி சுசுகி 800 மாடலைக் கொண்டே தனக்கான ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்கி இருக்கின்றார்.
தான் இந்த காரை உருவாக்கிய விதம் குறித்த காட்சிப் பதிவையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார். இந்த காட்சிப் பதிவு வாயிலாகவே அவர் மிகவும் விலை குறைவான ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்கி இருப்பது இந்த உலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. மேலும், பலரை ஆச்சரியமடைய வும் அந்த காட்சிப் பதிவு செய்திருக்கின்றது.
மிகவும் நேர்த்தியாக ரோல்ஸ் ராய்ஸ் காரின் உருவத்தை அந்த இளைஞர் மாருதி சுசுகி 800-க்கு கொடுத்திருக்கின்றார். குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் காரின் முகப்பு பகுதிக்கு பெரும் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் இடம் பெற்றிருக்கும் ‘ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி’ (ஷிஜீவீக்ஷீவீt ஷீயீ ணிநீstணீsஹ்’)-யைக் கூட இந்த காரில் அவர் வழங்கி இருக்கின்றார்.
இது அந்த காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதனை சிறுவர்களுக் கான விளை யாட்டு பொருட்களில் இருந்து பெறப்பட்டு காரில் பொருத்தி யிருக்கின்றார். மேலும், சாதாரணமான மாருதி 800 காரை மிகவும் அரிய வகை காராக மாற்றுவதற்காக அந்த காரில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார்.
குறிப்பாக, காரின் உள் மற்றும் வெளிப்புறத்தில் மிகப் பெரிய மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார். இந்த மாற்றங்களினாலேயே அந்த காரின் வெளிப்புறம் ரோல்ஸ் ராய்ஸ் காரை போல மாறி இருக்கின்றது. அதேவேளையில், பிஎம்டபிள்யூ காரில் காணப்படும் சில சொகுசு அம்சங்களையும் இந்த காரின் உட்பக் கத்தில் அவர் சேர்த்திருக் கின்றார்.
இதற்காக முன்னதாக மாருதி 800 காரில் வழங்கப்பட்டு இருந்த பல்வேறு பாகங்களை அவர் அகற்றி இருக்கின்றார். இந்த நிலையிலேயே ரோல்ஸ் ராய்ஸ் காரை போல மாற்றுவதற்கான பாகங்கள் அனைத்தையும் அவரே அவரு டைய கைப்பட உருவாக்கி இருக்கின்றார். மெட்டல் ஷீட் களைக் கொண்டு வெளிப்புற பேனல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர் உள்ளிட் டவையும் ரோல்ஸ் ராய்ஸ் காரை பிரதி பலிக்கும் வகையிலேயே அவர் சேர்த்திருக்கின்றார். இந்த அனைத்து மாற்றங்களையும் மேற்கொள்ள அவருக்கு வெறும் ரூ. 45 ஆயிரம் மட்டுமே செலவாகி யதாகக் கூறப்படுகின்றது. இவ்வளவு குறைவான செலவில் அவர் ரோல்ஸ் ராய்ஸ் பிரதிபலிப்பை உரு வாக்கியது உண்மையில் மிகப் பெரிய ஆச்சரியமான செயல் என கார் ஆர்வலர்கள் பலர் அந்த நபரை பாராட்டி வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த ஹதிஃப் என்பவரே இந்த காரை உருவாக்கியவர் ஆவார். அவர் இதுபோன்று தனித்துவமான தோற்றம் கொண்ட கார்களை உருவாக் குவது முதல் முறை யல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற கார்களை அவர் வடிவமைத்திருக்கின்றார். சமீபத்தில்கூட மோட்டார் சைக்கிளின் எஞ்ஜினைக் கொண்டு ஜீப் நிறுவன காரை அவர் தயார் செய் திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.