2024 தேர்தல் காந்திக்கும் கோட்சேவுக்குமான தேர்தல்: ராகுல் காந்தி

2 Min Read

அரசியல்

சாஜாபூர், அக். 4 – 2024 நாடா ளுமன்றத் தேர்தல் என்பது காந்தியாருக்கும் கோட்சேவுக்கும் இடை யேயான தேர்தல் என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கிறது.

மேலும் 18 ஆண்டு களாக பா.ஜ.க ஆட்சியிலிருந்தாலும் அம்மாநிலத்திற்கு எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களை யும் கொண்டு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்து உள்ளது. 

கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங் களும் அதிகரித்துள்ளது.

இது எல்லாம் சேர்ந்து பா.ஜ.க மீது மக்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் எனவும் கூறி வருகிறது. இதனால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.கவும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது காந்தியாருக்கும் கோட்சேவுக்கும் இடையேயான தேர்தல் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சாஜாபூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற் றது.இதில், ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தன்னை ஓ.பி.சி பிரிவினரின் தலைவர் என்று காட்டிக் கொள் ளும் பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஏன் ஓ.பி.சி பிரிவினரைச் சேர்க்க வில்லை?. ஓ.பி.சி சமூகத் திற்கு எதிரான அரசாகவே பா.ஜ.க உள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்து விட்டதாகா பா.ஜ.க சொல்கிறது. ஆனால் இதை சட்டமாக நிறை வேற்ற இன்னும் 10 ஆண் டுகளுக்கு மேல் ஆகும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது காந்தி யாருக்கும் கோட்சேவுக் கும் இடையேயான தேர் தல். அன்புக்கும் வெறுப் புக்கும் இடையேயான தேர்தல்” என தெரிவித் துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *