23.2.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே டில்லி மாநிலத் திற்கான தொகுதி பங்கீடு இணக்கமாக முடிந்துள்ளதாக தகவல்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயி கொலைக்கு காரணமான வர் அரியானா முதலமைச்சர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை.
* கலாசேத்திரா கல்வி நிறுவனத்தில் மாணவிகள் மீது பாலியல் வன்முறை – நீதிபதி கண்ணன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜம்மு காஷ்மீரில் கிரு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் ப்ராஜெக்ட் நிறுவனம் தனக்கு ரூ.150 கோடி லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக குற்றம் சாட்டிய நிலையில், தனது வீட்டில் சி.பி.அய். அதிகாரிகள் சோதனையிடுகின்றனர் என மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டி யுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மணிப்பூரில், மெய்தி பழங்குடியின பிரிவை தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்ப்பதற்கு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்து அதன் காரணமாக கடந்த ஓராண்டாக கலவரமும் வன்முறையும் வெடித்தது. தற்போது, நீதிமன்ற உத்தரவில் உள்ள குறிப்பிட்ட பத்தியை நீக்கி மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி இந்து:
* பிப்ரவரி 25ஆம் தேதி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்கிறார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மக்கள் திராவிட மாடல் அரசை ஆதரிப்பதால், மோடி அரசு தமிழ்நாட்டுக்கு எதிராகச் செயல்படுகிறது – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment