கபிஸ்தலம், பிப். 23- கும்பகோ ணம் கழக மாவட்டம் கபிஸ்தலம் பெரியார் கல்வி சமூகப் பணி அறக் கட்டளை நிர்வாகத்தில் உள்ள மணி மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப் பள் ளிக்கு 14 .2. 2024 அன்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் வருகை தந்து பள் ளியை பார்வையிட்டார்.
பொதுச்செயலாளர் அவர்களை பள்ளியின் தாளாளர் நா.குணசேக ரன், அறங்காவலர்கள் சு.கலியமூர்த்தி, பொம்மி கணேசன், பள்ளியின் முதல்வர் க.முருகானந் தம், பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி யின் தாளாளர் வரதரா சன், முதல்வர் எஸ்.தீபக், மாணிக்கம், பகுத்தறிவா ளர் கழக பொதுச் செய லாளர் வி .மோகன் ஆகி யோர் வரவேற்றார்கள்
கழக பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் பள்ளி வளாகத்தில் உள்ள தந்தை பெரியார், பள்ளி நிறுவநர் கபிஸ்தலம் தி.கணேசன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து பெரியார் 1000 தேர்வு தொடர்பாக மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பட்டுக் கோட்டை அழகிரி மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களிடம் கேட்ட றிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆக்க பூர்வமான சிந்தனைத் திறனை வளர்ப்பது எப் படி? என்பது பற்றியும், மாணவர்கள் தங்கள் வாழ்க்கை எப்படி வடி வமைக்க வேண்டும் என் பது பற்றியும் உற்சாகமூட் டும் ஊக்க உரையை வழங் கினார். இடை இடையே மாணவர்களிடம் வைக் கம் போராட்டம் பற்றிய விவரங்களைக் கேட்டு அவர்களைப் பேச செய் தார். சிறப்பாக பேசியவர் களுக்கு பயனாடையை அணிவித்து சிறப்பித்தார்.
பள்ளி முதல்வர் க .முரு கானந்தம் நன்றிகூறினார்.
கபிஸ்தலம் மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000: கழகப் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு
Leave a Comment