வைக்கம் போராட்ட நூற்றாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கழகக் கொடியேற்றுவிழா கன்னியாகுமரி வெள்ளமடம் கிறிஸ்துநகரில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக இலட்சியக் கொடியினை ஏற்றிவைத்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் எம். பெரியார் தாஸ், நாகர்கோவில் மாநகர கழக இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார், கழகத் தோழர்கள் மு.இராஜன், தி.ஞானவேல், தும்பவிளை பால்மணி புதிய தோழர் தாழக்குடி பிரைட் .தோவாளை ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.