‘பானை’ சின்னம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.22- மக்களவைத் தேர்தலில் வி.சி.க. 5 மாநிலங்களில் போட்டியிடவுள்ளதாக வும், பானைச் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத் துள்ளதாகவும் அக்கட்சி யின் தலைவர் திருமா வளவன் கூறியிருக்கிறார்.
கடந்த நாடாளுமன் றத் தேர்தலில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும், ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட் டியிட்டு வெற்றி பெற்ற னர். அதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கப் பட்டது. 6 சட்டமன்ற தொகுதியில் போட்டி யிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றனர்.

இரண்டு தேர்தலில் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டி யிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட் டது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி அங்கம் வகிக் கும் வி.சி.க., இந்தியா கூட் டணியில் விரைவில் மக் களவைத் தேர்தலில் போட் டியிடுகிறது. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வரு கிறது.
இதற்கிடையில், டில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் வி.சி.க.வுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வலியு றுத்தி திருமாவளவன் நேரில் சென்று நேற்று (பிப். 20) மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா மற்றும் கருநாடகா மாநி லங்களில் விசிக சார்பில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாகவும், வி.சி.க.வுக்கு சுயேட்சை சின்னத்தில் இருந்து பானைச் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத் துள்ளதாகவும் கூறினார்.
மேனாள் குடியரசுத் தலைவரும், ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுத் தலை வருமான ராம்நாத் கோவிந்தை நேரில் சந் தித்து, ஒரே தேர்தல் என் பது அதிபர் ஆட்சிக்கு வழி வகுக்கும் என்றும், அதனைக் கைவிட வேண் டும் எனவும் வி.சி.க. சார்பில் கோரிக்கை மனுவை அளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *