விண்வெளி மாசுபாட்டை குறைக்க உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் நாடு இந்த கோடை காலத்தில் விண்ணில் ஏவுகிறது. நாசா மற்றும் ஜப்பான் ஏரோ ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோ ரேஷன் நிறுவனம் (JAXA) ஆகியவை லிக்னோ சாட் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன. இதுவே உலகின் முதல் மர செயற்கைக் கோளாகவும், விண்வெளியில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டை கட்டுப்படுத்தும் செயற்கைக் கோளாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சிறிய செயற்கைக்கோளை கியோட்டோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சுமிடோமோ ஃபாரெஸ்ட்ரி என்ற மர நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளனர். செயற்கைக் கோளின் மக்கும் தன்மை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மாக்னோ லியா மரத்தால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட் டுள்ளது. இது பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் நிலையானதாகவும், விரிசலை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது. வரும் கோடைக்காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டு வருகிறது.
செயல்பாட்டை நிறுத்திக்கொண்ட செயற்கைக் கோள்கள் மீண்டும் பூமிக்குள் நுழையும் போது எரிந்து சிறிய அலுமினிய துகள்களாக பல ஆண்டுகள் வளி மண்டலத்திலேயே மிதக்கின்றன. இது பூமி மற்றும் விண்வெளியின் சுற்றுச் சூழலில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த புதியவகை செயற்கைக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி மாசுபாட்டை குறைக்க உலகின் முதல் மர செயற்கைக்கோள்
Leave a Comment