செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால்
லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்!
சென்னை, அக். 5- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் லட்சக் கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
உருகுவேயில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பி னர் பி.வில்சன் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் குறித்து விரிவாக உரை யாற்றினார்.
அவரது உரை வருமாறு:-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு பயன் பாடுகள் கிட்டத்தட்ட இன்று எல்லா துறைகளிலும் காணப் படுகின்றன செயற்கை நுண் ணறிவு தொழில்நுட்பத்தால் புதிய வாய்ப்புகள் உருவாகும் அதே வேளையில், அதன் பயன் படுத்தும்போது ஏற்படும் அபா யங்களைப்புரிந்து கொள்வதற் கும், அவற்றை நிர்வகிப்பதும் பெரும் சவாலாக உள்ளது.
தொழில்நுட்பத்தில் முன் னேறுவதற்கான போட்டியில் நாம் ஈடுபடுவதால், பாதுகாப்பு களில் நம்முடைய சுவனம் குறை வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அணுஆயுத பயன்பாட்டைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப் படும் ஒப்பந்தங்களைப் போலவே, செயற்கை நுண்ணறி வுக்கும் ஒப்பந்தங்கள் வேண்டும் என கோரிக்கை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்தே எழுந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் விளைவுகள் நேர்மறையாகவும், அவற்றின் அபாயங்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தால் மட் டுமே. அவற்றின் உருவாக்கத் திற்கு நாடாளுமன்றங்கள் ஒப்புதல் தரவேண்டும். செயற்கை நுண்ணறிவு நமக்கு முன்வைக் கும் ஒரு முக்கியமான சவால், இது வேலையின்மைக்கு வழி வகுக்கும். மேலும் லட்சக்கணக் கான ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும். எனவே, நாம் கட்டமைக்கும் ஒழுங்குமுறை கள், வேலைவாய்ப்பை பாது காப்பதை உறுதிசெய்ய வேண் டும். தேவைப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான எந்தவொரு சட்டத்தையும் இயற்றும் முன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வரைவுச் சட்டத்தை உருவாக்கி, பொதுமக்கள், துறை வல்லுநர்கள், தொழில் துறை யினர், மனித உரிமை அமைப் புகள், பெண்கள் அமைப்புகள், குழந்தைகள் உரிமை அமைப்புகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்யவேண்டும்.
-இவ்வாறு பி.வில்சன் எம்.பி. தெரிவித்தார்.