சென்னை, பிப். 22- திருப்போரூரை சேர்ந்த நாதஸ்வர கலைஞரின் மகன் வழக்குரைஞர் யுவ ராஜ், சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற் றார்.
திருப்போரூர் அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தனசேக ரன் -_ லோகநாயகி. நாதஸ் வர கலைஞரான தனசேக ரன், திருப்போரூர் நகர தி.மு.க. செயலாளராக இருந்து கடந்த 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறை வால் இறந்துவிட்டார்.
இவரது மகன் யுவராஜ் (30). இவருக்கு திருமணமாகி நிஷாந் தினி என்ற மனைவியும், ஆழி (1) என்ற மகளும் உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை அம் பேத்கர் சட்டப் பல் கலைக்கழகத்தில் பி.எல். (ஹானர்ஸ்) படித்து முடித்த யுவராஜ், பின்னர் அதே பல்கலைக்கழகத் தில் எம்.எல். சேர்ந்து 2017ஆம் ஆண்டு முடித்து, சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அண் மையில் நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் கலந்துகொண்டு தேர்வெழுதினார். இந்த தேர்வில் யுவராஜ் வெற்றி பெற்று நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள் ளார்.
இந்த, தகவல் வெளி யானதும் அவரது குடும் பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரு கின்றனர். ஏற்கெனவே மலை வாழ் சமூகத்தைச் சேர்ந்த பெண், சலவைத் தொழிலாளியின் மகன், மணல் கொள்ளையில் கொள்ளப்பட்ட வி-.ஏ.ஓ. வின் மகன் ஆகியோர் நீதி பதி தேர்வில் வெற்றி பெற் றிருந்த தகவல் வெளியா னது. தற்போது நாதஸ்வர கலைஞரின் மகன் வெற்றி பெற்றுள்ளது தெரியவந் துள்ளது.
அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதற்கு தமிழ் நாட்டின் கல்வி குறித்த விழிப்புணர்வுதான் கார ணம் என்று தெரிய வந் துள்ளது.