கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி குருந்தன் கோடு ஒன்றியம் திங்கள் நகர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கினார். குமரி மாவட்டச் செயலாளர்
கோ.வெற்றிவேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத் தார். திமுக ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய விழிப் புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.
பகுத்தறிவாளர் கழகம் சார்பாக விழிப்புணர்வு பரப்புரை
Leave a Comment