மனத்தூய்மை உடல் தூய்மை,
உடலும் மனமும் பிரிக்க முடியாதவை..
உடல் கண்ணுக்கு தெரியும் மனம்.
மனம் கண்ணுக்கு தெரியாத உடல்.
இதில் ஒன்றில் ஏற்படும் மாற்றம் மற்றொன்றில் பிரதிபலிக்கும்.
எனவே மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நிச்சயம் தொடர்புண்டு.
நம் மனதில் ஏற்பட்ட மாற்றம், பிறகு வேதியியல் மாற்றமாக ஹார்மோன் சுரக்கப்படுகிறது.
இந்த வேதியல் மாற்றம் காரணமாக உடல் வேகமாக இயங்க தொடங்குகிறது.
இதன் மூலம் மனதில் ஏற்படும் மாற்றமானது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணரமுடிகிறது.
உதாரணமாக, பயத்தில் சிறுநீர் பிரிவதை சொல்லலாம் !
மனம் என்பது நமது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது.
நாம் மற்றவர்களை நேசிக்கும் மனமுடையவராக இருக்கு போது நமது செல்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று நேசிக்கிறது. ஒருங்கிணைந்து செயலாற்றுகிறது.
நாம் பிறரை வெறுப்பவராக இருந்தால் நம் செல்களிலும் அதே மனநிலை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு செல்லும் மற்றொரு செல்லை வெறுக்கிறது. செல்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற மறுக்கிறது என்கிறது விஞ்ஞானம் !
மனிதனின் மனநிலை நீரில் பிரதிபலிப்பதாக ஜப்பானிய விஞ்ஞானி மசாரோ எமட்டோ தனது ஆய்வை முன் வைத்தார்.
மனித உடலானது மூன்று பங்கு வரை நீரால் ஆனது. எனவே மனநிலையானது உடல் மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
சரி, மனதில் எண்ணங்கள் சிறந்தால் என்ன நிகழும் :
1. பிறரை நேசிப்பது..
2. மன அழுத்தம் ஏற்படாதவாறு வாழ்க்கை சூழலை அமைத்துக் கொள்ளுதல்..
3. நோய்கள் குறித்தான பயத்தை விடுவது..
4. நோய் குணமாகும் என்ற நம்பிக்கையோடு இருப்பது..
5. நடந்ததை நினைத்து மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தாமல் இருப்பது திகழும்.
6. மனதை பாதிக்கும் செயல்களை தவிர்க்கலாம் .
7. உடலில் ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்து அது குறித்தான பயத்தில் சிக்காமல் இருக்க இயலும் .
8. மனதிற்கு பிடித்த நற்செயல்களை செய்வது நடக்கும்.
9. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் உணவில் தவிர்ப்பது நிகழும்.
10. உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும்.
11. உடலின் குணமாக்கும் ஆற்றலை புரிந்துகொள்ளும் .
12. மனச்சமநிலையில் இருக்கும் .
13. மனதில் ஏற்படும் எண்ணங்கள் அனைத்தையும் சிந்தனையாக மாற்றாமல் தேவையற்ற எண்ணங்களை கடந்து மனம் சமநிலையில் இருப்பது நிகழும்.
எண்ணத்தின் வலிமை
Leave a Comment