மும்பை, அக். 5- மும்பை புற நகர் தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் 1.10.2023 அன்று மனிதநேயச் சூரியன் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாள் விழா “இதயம் அறக்கட் டளை” சார்பில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மகேந்தி ரன் அண்ணாமலை தலைமை தாங்கினார், இந்த நிகழ்வில் மும்பை திராவிடர் கழகத்தலை வர் பெ. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், அலங்கரிக் கப்பட்ட பெரியார் படத் துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் இனிப்புகள் வழங்கினர், குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின, தந்தை பெரியார் வேட மிட்டு நடித்துக் காட்டி னர். பெரியார் பாடல் களை பாடி மகிழ்ந்தார் கள், சிறப்பு விருந்தினர் தமது உரையில் தந்தை பெரியார்- அண்ணல் அம் பேத்கர் குறித்தும், மத வெறி சிந்தனைக்கு இடம் தரக் கூடாது,குழந்தை களை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும், அதுதான் நமது ஆயுதம் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, இந்த நிகழ்வில் பத்லாபூர் தமிழ்ச்சங்க ஆயுள் கால உறுப்பினர் கணேசன் தொழிலதிபர் தானே முகிலன், மாரியப்பன் மனோஜ் குமார், நித்யா மோகன், குழந்தைகள், குழந்தைகளின் பெற் றோர்கள், மராட்டிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவை இந்த அமைப்பின் தலைவர் மகேந்திரன் அண்ணா மலை, செயலாளர் மோகன் டேவிட், பொருளாளர் வளர்மதி கணேசன், உறுப்பினர்கள் கலைச் செல்வன், நக்கீரன், அருணா, விக்னேஸ்வரன், சதீஷ், கார்த்திகேயன், சிவராஜ், தண்டபாணி, முத்துக்கனி, முத்துசாமி உள்ளிட்டவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தார்கள் வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தனர்.