செயற்கை நுண்ணறிவை (AI) எதிர்கொள்வது எப்படி? எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் கருத்தரங்கம்!

2 Min Read

சென்னை. பிப், 20- எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்ப னையாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், ”செயற்கை நுண்ண றிவை எதிர்கொள்வது எப் படி?” என்பதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை கோட்டூர்புரத் தில் உள்ள அண்ணா நூற் றாண்டு நூலகத்தின் இரண் டாம் தளத்தில், 17.02.2024 அன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை பதிப்பாளர் எழுத்தாளர் களுக்கான ஒரு நாள் கருத்தரங் கம், முனைவர் அவ்வை அருள் தலைமையில் நடைபெற்றது.
கோ.ஒளிவண்ணன் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் மனுஷ்ய புத்திரன், செல்வகுமார், சுரேஷ் சம் பந்தம், முனைவர் சுபாஷினி, சேஷாத்ரி, அசோக் கிரி, வேடி யப்பன் உள்ளிட்டோர் கருத்து ரையாற்றினர். இதில் தமிழ் நாடு, புதுவை ஆகிய மாநிலங் களிருந்து எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்ப னையாளர்கள் 70 க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண் டனர்.

எமரால்டு பதிப்பாளர் கோ.ஒளிவண்ணன் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார். அய்.ஆர்.எஸ். செல்வகுமார், ”டிஜிட்டல் தூரிகை” எனும் தலைப்பில் படக்காட்சிகளு டன், செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? அது எப்படி இயங்குகின்றது? அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினார். “புத்தக விற்பனைக்கு சமூக வலைத் தளங்களை எப்படி பயன்படுத் துவது?” எனும் தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பார் வையாளர்களுடன் கலந்துரை யாடினார். தொழில் முனைவர் சுரேஷ் சம்பந்தம், “30 டிரில் லியன் டாலர் பொருளாதாரம்” எனும் தலைப்பில் படக்காட்சி களுடன் செயற்கை நுண்ணறி வுத் திறனை எதிரியாக எண் ணாமல் ஒரு கருவியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்பதை ஒரு ஆலோசனையாக எடுத்து வைத்தார்.

முனைவர் சுபாஷினி, “அய் ரோப்பிய சந்தைக்கு தமிழ் நூல்கள்” எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் வெளியிடும் புத்தகங்களுக்கு அய்ரோப்பிய நாடுகளில் தேவை இருக்கிறது. இங்குள்ள புத்தகங்களை அங்கு கொண்டு போய் சேர்ப் பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். ”துரித வேகம்” என்னும் தலைப்பில் சேஷாத்ரி, பெரும் வருவாய் ஈட்ட செயற்கை நுண்ணறிவு என்னும் தலைப்பில் அசோக் கிரி ஆகியோர் உரையாற்றினர். டிஸ்கவரி புக் பேலஸ் உரிமை யாளர் வேடியப்பன், “புதுப் பொலிவுடன் புத்தகக் கடை கள்” என்னும் தலைப்பில் தன் னுடைய தனிப்பட்ட அனுப வங்களை பகிர்ந்து கொண்டார். இறுதியாக கோ. ஒளிவண்ணன் நன்றியுரை கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *