தஞ்சை, பிப். 20- பன்னாட்டு தமிழ் உறவு மன்றமும் அனைத்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா 32ஆம் ஆண்டு பயணம் (ஊர்தி) 12-.2.-2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி 24.2.-2024 சென்னை வரை நடை பெறும் பரப்புரைப் பயண வர வேற்பு கூட்டம் 19-.2.-2024அன்று மாலை 7.30 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி தலைமை அஞ்சல் நிலை யம் அருகில் நடைபெற்றது.
மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரன் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட திரா விடர் கழகத்தலைவர் வழக்குரை ஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார்.
கழக பேச்சாளர் பூவை.புலிகேசி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பயணத்தின் நோக்கம் குறித்து பெருங் கவிக்கோ வா.மு.சேது ராமன் சிறப்புரையாற்றினார். தொடக்கத்தில் பகுத்தறிவாளர் மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு தமிழ் உணர்வு பாடல் களை பாடினார். புலவர் கோபால கிருஷ்னன் நன்றி கூறினார்.