ராமர் காப்பாற்ற மாட்டாரோ!
செய்தி: ராமர் கோயில் திறப்பு விழா வீடியோவை காட்டி ஆந்திராவில் அறுவைச் சிகிச்சை.
சிந்தனை: அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே ராமர் காப்பாற்ற மாட்டாரோ!
இப்பொழுது புரிகிறதா!
செய்தி: முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் போராட்டம் – இந்து முன்னணி எச்சரிக்கை.
சிந்தனை: இந்து முன்னணி சங் பரிவார் கூட்டத்திற்கு மதவாதத்தை தவிர வேறு எந்தச் சரக்கும் இல்லை என்பது இப்பொழுது புரிகிறதா!
கூட்டணி இல்லை
செய்தி: தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.
சிந்தனை: கட்சியின் பெயரே அகில இந்திய அண்ணா திமுக ஆயிற்றே!