2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையை
சட்டமன்றத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (20.2.2024) வேளாண்மை நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
சட்டமன்றம் இன்று (20.2.2024) காலை 10 மணியளவில் கூடியதும் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள், 2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையை, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் பேரவைக்கு அளிப்பார் என அறிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் 2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.