தஞ்சை, அக்.6 நியூஸ் கிளிக் சேனல் மீது மோடி அரசு நடத்தியுள்ள தாக்குதலை கண்டித்தும், பாஜக ஆட் சியில் ஊடக, பத்திரிகை யாளர்களின் சுதந்தி ரத்தை முழுமை யாக பறிப்பதையும், முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்க யஸ்தாவை, கைது செய்ததை கண் டித்தும், பத்திரிகை ஊடக சுதந்திரத்தை பாதுகாத்திட வலி யுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி யில் போராட்டம் நடை பெற்றது இதில் மாநிலத் தலைவர் கோ. அரவிந்த சாமி கலந்து கொண்டு பேசினார். மாவட்டத் தலைவர் அர்ஜுன், மாவட்டச் செயலாளர் சந்துரு மற்றும் நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, பத்திரிகை சுதந்திரத்தை காக்க வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் அத்துமீறலைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஒன்றிய அரசை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Leave a Comment