குலசேகரப்பட்டணத்திற்கு தமிழர் தலைவர் வருகை விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க முடிவு
கன்னியாகுமரி வௌ¢ளமடத்தில் தோவாளை ஒன்றிய கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
வெள்ளமடம்,பிப்.19- தோவாளை ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் வெள்ள மடத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்
கோ.வெற்றி வேந்தன் தலைமையில் அவருடைய இல்லத்தில் நடை பெற்றது.
மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் இயக்க வளர்ச்சிக்கான பணிகள், செயல்திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாவட் டத் தலைவர் உ.சிவதாணு, கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் முன் னிலை வகிக்து உரையாற்றினர்.
சு.அறிவுக் கரசு அவர்களுடைய மறைவுக்கு இந்த கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
வரும் 22 ஆம் நாள் குலசேகரப் பட்டணத்தில் நடைபெற உள்ள தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் அவர்களுக்கு நன்றி பாராட்டு விழா, வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா, கலைஞர் நூற் றாண்டு விழாவில் குமரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் பெருந்திரளாக குடும்பத்துடன் பங்கேற்பது, தோவாளை ஒன்றிய சார்பாக ஆரல்வாய்மொழி, திட்டு விளை, அழகிய பாண்டியபுரம் ஆகிய இடங்களில் கொள்கை விளக்க பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, பொதுமக்களிடம் பெரியாருடைய நூல்கள் வழங் குவதல்.
பள்ளிக் கல்லூரியில் விழிப் புணர்வு பரப்புரை நடத்துவது, திராவிடர் கழக ஏடுகள் விடுதலை, உண்மை, பெரியார்பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவை களுக்கு அதிக சந்தாக்களை சேர்ப்பது, வழக்கமான சாலையில் போக்குவரத்தைத் தொடங்க ஒழு கினசேரி பகுதியில் நடைபெற்று வரும் பாலப் பணிகளை உடனே முடிக்க இரயில்வே நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்வது, நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையை சுற்றியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை எடுத்துஅணையை விரிவுபடுத்தி தூர்வார நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்வது, திட்டுவிளை பகுதியில் உள்ள பழுதடைந்த தெருக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பூதப்பாண்டி பேரூராட்சியை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.
திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் எம். பெரி யார்தாஸ், நாகர்கோவில் மாநகர திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார், கழகத் தோழர்கள் மு.இராஜன், தி.ஞானவேல், தும்பவிளை பால் மணி புதிய தோழர் தாழக்குடி பிரைட் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தோவாளை ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம் நன்றி கூறினார்.