சென்னை, பிப். 19- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து இணைப்பு கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் விரிவான விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறது.
“சென்னை மாநகரிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் துக்கு நேரடியாக மக்கள் செல்ல கைவசமிருப்பது பேருந்து வசதி மட்டுமே. மின்சார ரயில் நிலைய இணைப்போ, மெட்ரோ ரயில் நிறுத்தமோ இன்னும் ஏற்படுத்தப் படவில்லை, ரயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரூபாயை, சமீபத்தில் தான் ஒதுக்கி யிருக்கிறது தமிழ்நாடு அரசு” என்று தனியார் இதழ் ஒன்றில் கட்டுரை வெளியிடப்பட்டு இருந் தது.
இதற்கு சிஎம்டிஏ வெளியிட்டு உள்ள பதிலில், “கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின்னர் சென்னை மாநகர பகுதிகளையும் புதிய கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை இணைக்கும் வகை யில் சென்னை மாநகர் போக்கு வரத்து கழகம் மூலம் 498 வழக்க மான பேருந்துகளும் மற்றும் நெரிசல் மிகுந்த நேரங்களில் 200 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத் தம் 698 பேருந்துகள் மூலம் 4,651 நடைகள் இருவழி புறப்பாடுகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய கட்டடத்திற்கும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து முனையத்திற்கும் இடையே 4 மினி பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் வண்டலூர் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் (KCBT) இடையே 2 மினி பேருந்துகள் கட்டண இணைப்பு சேவை பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் (KCBT) கோயம்பேடு பேருந்து முனையத் திற்கும் (CMBT) 5 நிமிடத்திற்கு ஒரு முறை சென்னை மாநகர் போக்கு வரத்து கழகப் பேருந்துகள் (MTC) இயக்கப்பட்டு வருகின்றன.
இதை தவிர கலைஞர் நூற் றாண்டு பேருந்து முனையத்திற்கும் (KCBT), தாம்பரம் பேருந்து நிலை யத்திற்கும் 2 நிமிடத்திற்கு ஒரு முறையும், 6 பேருந்துகள் பாயிண்ட்- டூ -பாயிண்ட் பேருந்துகளாகவும், அதே போல கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் (KCBT), கிண்டி பேருந்து நிலையத்திற்கும் இடையே 3 நிமிடத்திற்கு ஒரு முறையும் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இம்முனையத்திலி ருந்து சோழிங்கநல்லூர், வேளச் சேரி, திருவான்மியூர், தியாகராயர் நகர், மாதவரம், அம்பத்தூர், திரு.வி.க. நகர். செங்குன்றம், ஆவடி, மற்றும் பூவிருந்தவல்லி போன்ற முக்கிய நகரத்திற்கும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் (MTC) பேருந்துகள் இயக்கப்படு கின்றன.
மேலும், கிளாம்பாக்கம் கலை ஞர் நூற்றாண்டு பேருந்து முனை யத்தை கருத்தில் கொண்டு பொது மக்கள் மற்றும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றப் பிறகு புதிய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டு ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு, பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இப்பணிகள் 6 மாத காலத் திற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் சென்னை மாநகரத்தில் இருந்து விரைவான போக்குவரத் தினை உறுதி செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறு வனத்தின் (CMRL) மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை கிளாம் பாக்கத்தில் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இவ்வாறு சிஎம்டிஏ அறிக் கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.