விருதுநகர், பிப்.19 ‘பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அங்கன்வாடி, காலை சத்துணவு திட்ட பணிகளில் முன் னுரிமை அளிக்கப்படும்’ என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ராமுத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் 17.2.2024 அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண உதவிகளை விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (18.2.2024) வழங்கினார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சாத் தூர் மாவட்ட ஆட்சியர் ரகுராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து, வருவாய்த்துறை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர்களை சம்பவ இடத் திற்கு அனுப்பி மீட்புப் பணிகள் மேற் கொள்ள அறிவுறுத்தி இருந்தார். உயிரி ழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ரூ.2.05 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. காயமடைந்த 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ள னர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிரந்தர வேலை கோரி மனுக்கள் அளித்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கன்வாடி, காலை சத்துணவு திட்ட பணிகளில் முன்னுரிமை அளிக் கப்படும்’’ என்றார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘பட்டாசு ஆலைகளை வருவாய்த்துறை, தொழிலாளர் நலத் துறை கண்காணித்து வருகிறது. மனித தவறால் விபத்துக்கள் நடக்கிறது. தற் போதைய விபத்தும் மருந்து கலக்கும் போது நடந்துள்ளது. விதிமீறி இயங்கிய 30 ஆலைகள் ஏற்கனவே மூடப்பட் டுள்ளன. தற்போது விபத்து நடந்த ஆலையையும் மூட உள்ளோம். எதிர் காலத்தில் விபத்து நடக்காமல் இருப் பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்கிறோம்’’ என்றார்.
பட்டாசு ஆலை மேலாளர் கைது:
பட்டாசு ஆலை விபத்து குறித்து ஆலங் குளம் காவல்துறையின் ஆலை உரிமை யாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால், போர்மேன் சுரேஷ்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் கவனக் குறைவாக செயல்பட்டு மனித உயிருக்கு சேதம் ஏற்படுத்தியது, வெடி பொருட் களை முறையாக கையாளாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் போர்மேன் சுரேஷ்குமாரை 17.2.2024 அன்று இரவு கைது செய்தனர். ஆலை மேலாளர் ஜெயபாலை 18.2.2024 அன்று கைது செய்தனர். ஆலை உரிமையாளர் விக்னேஷை தேடி வருகின்றனர்.