சென்னை,பிப்.19- திமுக தலைவரும் தமிழ் நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 165ஆவது பிறந்த நாளில் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள் கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 165-ஆவது பிறந்தநாள் இன்று (18.2.1860)
ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும் பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத் தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.