கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் செண்பகராமன்புதூர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த புதிய தோழர் கல்லூரி மாணவர் வசந்த் தந்தை பெரியாருடைய கொள்கையால், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுடைய செயல்பாட்டால் ஈர்க்கப் பட்டு திராவிடர்கழகத்தில் உறுப்பினராக பதிவுசெய்தார். தந்தை பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய நூல்களை வழங்கி கன்னியாகுமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் புதிய தோழரை பாராட்டினர்.