பெரம்பலூர், பிப். 18– பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 17.2.2024 சனிக் கிழமை காலை 10 மணியளவில் தொடங்கி மாலை 6 மணி வரை பெரம்பலூர் பாலக்கரையிலுள்ள தி.மு.க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பயிற்சிப் பட்டறைக்கு மாவட்ட தலைவர் சி. தங்கராசு தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு.விஜயேந்திரன் வரவேற்புரையாற்றினார். மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவ மூர்த்தி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஓவியர். கி. முகுந்தன், அரியலூர் மாவட்ட செயலாளர் மு. கோபால கிருட்டிணன், இணைச் செயலாளர் இரத்தின. இராமச் சந்திரன். பொதுக்குழு உறுப்பினர் இரா. அரங்கராஜன், நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம், நகர செயலாளர் அ.ஆதிசிவம், ப.க. மாவட்டத் தலைவர் பெ. நடராஜன், மாவட்ட அமைப் பாளர் பெ.துரைசாமி,நகரத் துணைச் செயலாளர் பெ. அண்ணா துரை,மாவட்ட இளைஞரணி தலைவர் செ. தமிழரசன், வி.களத்தூர் பெரியார் பெருந்தொண்டர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக . பொன்முடி அறிமுக உரையாற்றினார்.தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் தொடக்க உரையாற்றினார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையை துவக்கி வைத்து சிறப்பு ரையாற்றினார். . கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து வழி நடத் தினார். பின்னர் வகுப்புகள் தொடங்கியது.
வகுப்புகளின் சிறப்புகள்
“தந்தை பெரியார் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில் ஆசிரியர் மா. அழகிரிசாமி தந்தைப் பெரியார் செல்வக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து -பொது வாழ்க்கையில் ஈடுபட்டு ,வைக்கம் போராட்டம் முதல் பல்வேறு போராட் டங்களை மனித சமத்துவத்திற்காக நடத்தியதைக் குறிப்பிட்டு வகுப்பு எடுத்தார்.
“பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புகள்” என்ற தலைப் பில் முனைவர் அதிரடி அன்பழகன். தமிழர் வாழ்வில் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டு சிதைவுகளை தமிழனின் பெயரில், ஊரின் பெயரில் வழிபாட்டு முறையில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கி வகுப்பு எடுத்தார்”தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் சாதனைகள் ” என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.சி. வில்வம், ஆசிரியர் வீரமணி அவர்கள் இளமைக்காலந் தொட்டு இன்று வரை தந்தைப் பெரியாரின் கொள்கைகளை பரப்பிடும் பாங்கு பற்றியும், சமூக நீதிக்கான களத்தில் அவர் ஆற்றிய அரும் பணிகள் குறித்தும் விரிவாக வகுப்பு எடுத்தார். ” மந்திரமா தந்திரமா ” அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை மு.விஜயேந் திரன் சிறப்பாக செய்து காட்டினார். கண்ணாடித் துண்டுகள் மீது அவர் படுத்துக் காட்டியதும் மாணவர்கள் திகைத்தனர். “இந்து இந்துத்துவா ஆர்எஸ்எஸ் “என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் இந் துத்வா ஆட்சியதிகாரத்தில் எவ்வாறு ஊடுருவியிருக்கிறது என்பதை ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் நடந்து கொண்ட முறையினைக் கொண்டு விளக்கினார். இந்துமதம் என்பது எப்படி உருவானது? இந்துத்வா எப்படி ஆபத்தானது என்பதை விளக்கி வகுப்பு எடுத்தார். “தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்” என்ற தலைப்பில் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அனைத்து நிலையிலும் சமத்துவம் ஏற்படுத்த போராடிய பெரியார் பெண்களின் சமத்துவத்திற்காக பெரிதும் சிந்தித்த தலைவர். பெண்களின் உரிமைகளுக்காகவும் மனித சமத்துவத்திற்காகவும் நீதிக்கட்சி பெரியார் தொடங்கி சிந்தித்து கொள்கைகளை வகுத்தார்கள். அறிஞர் அண்ணா தொடங்கி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை செயல் படுத்துகிறார்களே அதுதான் திராவிட மாடல் என்று கூறி வகுப்புஎடுத்தார்.
காணொலி வாயிலாக தமிழர் தலைவர்
தந்தை பெரியாரின் சிறப்புகளையும் செல்வக்குடும்பத்தில் பிறந்த தந்தை பெரியார் பதவிக்காக அரசியலுக்கு வரும் இந்த காலத்தில் பதவிகளை துறந்து விட்டு பொது வாழ்க் கைக்கு வந்தவர் அறிவாசான் தந்தைப் பெரியார் உடல் உபாதைகளுக்கிடையேயும் 95 ஆண்டு காலம் வரை தமிழ் சமூகத்திற்காக தொண்டாற்றிய தலைவரின் தியாகத்தையும் விளக்கி காணொலியில் சிறப்பாக உரையாற்றினார். மாண வர்கள் மிகுந்த ஆர்வமுடன் தமிழர் தலைவரின் உரையை கவனித்தனர்.
பரிசுகளும் பாராட்டும்
பயிற்சிப் பட்டறையில்பங்கேற்ற அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ்களும் புத்தகங்களும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரிசுகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் வழங்கி சிறப்பித்தார். பயிற்சிப் பட்டறையில் 56 ஆண்களும் 20 பெண்களுமாக மொத்தம் 76 பேர் கலந்து கொண்டனர் கல்லூரி மாணவர்கள் 43 பேரும் பள்ளி மாணவர்கள் 21 பேரும் தொழிற்கல்வி மாணவர்கள் 12 பேரும் பங்கேற்றனர். சிறப்பாக குறிப்புகளை எடுத்த கீர்த்தனா, பூபாலன், நிவேதா, அஜித் குமார் , உஷா உள்ளிட்ட மாணவர்களுக்கு மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் எழுதிய “அம்பேத்கரும் பெரியாரும் – ஒரு பொருத்தப்பாடு ” என்ற புத்தகம் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.௹ரூ.2840-க்கு புத்தகங்கள் விற்பனை யானது, பங்கேற்ற மாணவர்களுக்கு மதிய உணவும் காலை, மாலை இரு வேளையும் தேநீர் மற்றும் சிற்றுண்டியும் வழங் கப்பட்டது.
மகிழ்ச்சியும் எழுச்சியும்
பயிற்சி முகாம் குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துகளை கூற வாய்ப்பு வழங்கப்பட்டது. கல்லூரிமாணவி கீர்த்தனா பேசும்போது.. பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பேச்சுப் போட்டியில் பங்கேற்றேன். அப்பொழுது “பக்தர்களே பதில் சொல்வீர் “என்ற புத்தகத்தை கொடுத்தார்கள். வீட்டிற்கு செல்வதற்குள் படித்து முடித்தேன் அதை படித்ததும் தான் தெரிந்தது எவ்வளவு காலம் நாம் இந்த விஷயங்கள் தெரியா மல் முட்டாளாக இருந்தோமே என்று அதற்கு பிறகுஈடுபாடு வந்து இந்த பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க வந்தேன் அனைவரையும் மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியை அளிக் கிறது. என்றார்.
அரசு கலைக் கல்லூரி மாணவர் சதீஷ் பேசும் போது பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள கற்றுக்கொள்ள ஆர்வம் மக்களிடம் உள்ளது பெரியாரின் கருத்துகள் ஆழமானது, சுருக்கு என்று தைக்கும். சிந்தனையை தூண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் அந்த வகையில் இந்த பயிற்சி முகாம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார். கல்லூரி மாணவி பூஜா பேசும் போது போர் அடிக்குமோ என்று பயந்து கொண்டே வந்தேன் சிறப்பான கருத்துகளை சிறப்பாக பேசினார்கள் தேவையற்ற கருத்து கள் என்று எதுவுமே இல்லை மேஜிக் அற்புதமாக இருந்தது ஆனாலும் கண்ணாடி துண்டுகள் மீதெல்லாம் படுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இனிமேல் எங்கு சென்றாலும் துணிந்து செல்வேன் என்று மாணவி குறிப்பிட்டார்
மாணவர் பிரசாந்த் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க வேண்டும் என்றவர் பெரியார். அப்படி கேள்விகள் கேட்ட தனால் நான் பகுத்தறிவாதி ஆனேன், சாமி என்றால் நல்ல வர்களை காப்பாற்றும் கெட்டவர்களை அழிக்கும் என்றார் கள் ஆனால் நல்லவர்களும் இறந்து போகிறார்கள் ஏனென்று எனக்குள் கேள்வி எழும்பியது அந்த கேள்வி படிப்படியாக என்னை பகுத்தறிவாக்கியது என்றார். பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருந்தது. மேலும் இவர்களோடு நான் தொடர்பில் இருப்பேன் எங்கள் ஊரில் கூட்டம் நடத்துவேன் என்று குறிப்பிட்டார்.ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வி.ரவிக்குமார், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் சி. பிச்சப் பிள்ளை, பெரியார் பெருந்தொண்டர் அரங்கையா, ஒன்றிய செயலாளர் சின்னசாமி,பெரம்பலூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி ஆதிமூலம் பெரியார் பெருந்தொண்டர் வரத ராஜன், பெரம்பலூர் நகர அமைப்பாளர் துரைசாமி,ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் அரங்க.வேலாயுதம் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.