எச்சரிக்கை
சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது.
சான்றிதழ்
தமிழ்நாட்டில் உள்ள 1,622 ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆய்வகங்களுக்கு தேசிய தரநிர்ணய சான்றிதழை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தகவல்.
செயலி
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மின் கட்டணத்தை எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் செலுத்த ‘TNGEDCO’ என்ற அலைபேசி செயலியை மின்வாரியம் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் கம்ப்ளைன்ட் என்ற பகுதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நியமனம்
குழந்தை நலக்குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திற்கான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜாடே தெரிவித்துள்ளார்.
சிறுநீரில்…
கேரளா மாநிலம் பாலக்காடு இந்தியன் இன்ஸ்டி டியூட் ஆப் டெக்னாலஜி (அய்.அய்.டி.) கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள், மனித சிறுநீரில் இருந்து மின்சாரம் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் ஆய்வக பரிசோத னையில் வெற்றி பெற்றுள்ளனர்.
செய்திச் சுருக்கம்
Leave a Comment