சென்னை, பிப்.17- தமிழ் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் கனகராஜ், ‘தமிழ் மொழி மேம்பாடு குறித்த ஆய்வு கள் நடத்த அறிஞர் குழுவை அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அரசா ணையை தமிழில் வெளியிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு 15.2.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ‘தமிழ் ஆராய்ச்சிக் காக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2013இல் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களை தமிழில் பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என வாதிடப் பட்டது. தமிழ் நாடு அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “தமிழ் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. தமிழ் வளர்ச் சிக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில்
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
மயிலாடுதுறை, பிப். 17- மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் நேற்று (16.2.2024) ஆய்வு நடத்தினார்.
மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் விரிவாக்கப் பணிகள் நடைபெற்ற வரு கிறது. ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதிகள், முகப்புகள் இடிக்கப்பட்டு புதிய முகப்புக்கான கட்டடங்கள் கட்டு மானப் பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் நடை பெற்று வருகிறது.
வளர்ச்சி திட்டப் பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை வருகை தந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களை மயிலாடுதுறை – தரங்கம் பாடி – காரைக்கால் வழித்தட ரயில்வே மீட்புக் குழு ஒருங் கிணைப்பாளர் குத்தாலம் பி.கல்யாணம் தலைமையில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், ரயில்வே பயனாளிகள் சங்கத் தலைவர் எஸ்.மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மயிலாடுதுறை – தரங்கம்பாடி வழித்தடத்தை மீண்டும் கொண்டு வருதல், தரங்கம்பாடியில் இருந்து காரைக் காலுக்கு புதிதாக வழித்தடம் உருவாக்குதல், மாப்படுகை, நீடூர் ரயில்வே மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தருமாறு கேட்டுக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அரசு தடை
சென்னை, பிப். 17- மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனையில், பஞ்சுமிட்டாயில் “ரோடமைன் பி” கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை உருவாக்கூடியது என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச் சர் மா.சுப்பிரமணியன், உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழ்நாட்டில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு தடை வித்துள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தெலங்கானாவிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு
சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்
அய்தாரபாத், பிப். 17- பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்தாண்டு வெளியிடப்பட்டது. இதன்பிறகு இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. பீகாரை தொடர்ந்து கருநாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதுகுறித்த விவரங்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், தெலங்கானா அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். இதை நிறைவேற்றும் விதமாக, கடந்த 4ஆம் தேதி முதல் அமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்த அமைச் சரவை கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
தெலங்கானா சட்டமன்ற கூட்டத்தொடரில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை, மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையிலான வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு வீடு வீடாக சென்று நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.