மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தியது, பல ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தது, நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. பல ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட்டது மற்றும் உலக அளவில் இந்தியாவை தலை கூனிய வைத்த (BJP-RSS) மத-தீவிர வாதிகளை தேச நலனுக்காக, இந்த தேர்தலில் தோற்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
3ஆவது முறையாக மோடி வெற்றி பெற்றால் நிச்சயமாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும்கலைக்கப்பட்டு ஒரே நாடு… ஒரே தேர்தல்… ஒரே அதிபர் ஆட்சி வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவில் உள்ள அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இலங்கையில் ராஜபக்சே சர்வாதிகாரியாக ஆனது போல… பாகிஸ்தானில் முஷ்ரப் சர்வாதிகாரியாக ஆனது போல மோடியும் நிச்சயமாக சர்வாதிகாரியாக மாறுவார்என்று அரசியல் வல்லுநர்கள் பெரும்பாலானோர் கூறுகிறார்கள்
ஏனென்றால்…. இன்றைய இந்தியா வின் நிலை, பொருளாதாரம் அதள… பாதாளத்தில் உள்ளது.
உதாரணமாக, 2014இல் 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா இந்த 9 ஆண்டுகளில் 205 லட்சம் கோடி கடனில் உள்ளது. அதாவது, இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் (1947 to 2014 வரை) 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா, மோடி ஆட்சியில் இந்த 9 ஆண்டுகளில் மட்டும் 151 லட்சம் கோடி கடனில் உள்ளது (2014 tஷீ 2023 வரை).
உலக அரங்கில் அய்.நா. அங்கீகரித்த 193 நாடுகளில் இந்தியா தான் உலக வங்கியில் 205 லட்சம் கோடி அதிக கடன் வாங்கி உள்ளது என்று உலக ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.
உலகில் மதச்சார்பற்ற பெரிய ஜனநாயக நாடு இந்தியா மட்டுமே.
இன்று பா.ஜ.க. அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதை மூடி மறைக்க அப்பாவி மக்களை தூண்டி விட்டு, நாம் இந்து…ராமர் கோயில்….ஜெய் சிறீ ராம்…என்று மதவாதஅரசியல் செய்வது.
இந்தியாவின் செல்வத்தை அம்பானி, அதானி கையில் விற்றது மற்றும் குஜராத்தி பணக்கார முதலாளிகள் கைகளில் மட்டுமே குவித்தது.
நீதித்துறை, CBI, ED- அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளை விலைக்கு வாங்கியது, EVM மிஷின் கோல்மால்கள்.
நேரு காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம் உருவாக்கிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு விற்றது.
வேலையில்லா திண்டாட்டம், ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை என்று இந்திய மக்களை ஏமாற்றியது.
பெட்ரோல் விலை உயர்வு (ரூ.58 இருந்து ரூ.103), சமையல் எரிவாயு விலை உயர்வு ரூ.400 இருந்து ரூ.1130), எல்லா பொருட்களின் விலையும் இந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தராமல்… நாம் செலுத்திய வரிப்பணத்தை எடுத்து பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கொடுப்பது… தமிழர்களை வஞ்சிப்பது… கருப்புப் பணத்தை மீட்டு எல்லா குடும்பத்துக்கும் ரூ. 15 லட்சம், கொடுப்பேன் என்று பொய் சொல்லி இந்திய மக்களை ஏமாற்றியது…
இந்தியாவை நாசமாக்கிது…. ஊடகத்தை கைப்பற்றியது…. பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை பறிப்பு… ஜனநாயகத்தை எதேச்சதிகாரமாக சீரழித்து, ஹிட்லர், சதாம், ராஜபக்சே போல்சர்வாதிகாரியாக செயல்படுவது… குற்றவாளிகள், பாலி யல் வன்கொடுமையாளர்கள் மற்றும் ஊழல்வாதிகளால் நிரப்பப்பட்ட அரசியல்… காவி மயமாக்கப்பட்ட வரலாறு… காவிமயமாக்கப்பட்ட கல்வி… திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு அடுத்தடுத்த குழப்பங்கள் மற்றும் உயிர் இழப்புகள்…
திட்டமிடப்படாத லாக் டவுன், குழப்பங்கள், அதனால் ஏற்பட்ட உயிர் பலிகள்…. சிறுபான்மை மக்கள் வீடுகள் மற்றும், வழிபாட்டு தலங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது, சிறுபான்மை மக்களை தாக்குவது, வெறுப்பு பேச்சுகள், மதக் கலவரங்கள், கொலைகள்….
காந்தியாரை படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வெளிப் படையாகப் புகழ்ந்து வணங்குதல்… பெண் மல்யுத்த வீராங்கனைகள் நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்து அவமானப்படுத்தப்பட்டது… டில்லியில் விவசாய மக்களை போராட வைத்து… தற்கொலை செய்ய வைத்தது… ஜிப் ஏற்றி கொலை செய்தது…
ஏனெனில்…. காந்தியவாதிகள் & அம்பேத்கர்வாதிகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசமைப்பின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மதச்சார்பற்ற இந்தியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தலித்துகள் பாஜக தோற்க வேண்டும் என்றுவிரும்புகிறார்கள்.
பட்டியலினத்தோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பழங்குடியினர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆதிவாசி மக்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சீக்கியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இஸ்லாமியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பாஜக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது.
உங்களைச் சுற்றியுள்ள குறைந்தது 10 பேருக்கு புரிதலை ஏற்படுத்தி, தேசியவாத வாக்காளர்களை மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்யுங்கள். அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை நம் குழந்தைகள் பார்க்க வேண்டும். நமது கடமையை நாம் செய்ய வேண்டும்.பாதுகாப்பான சமூகம் பாதுகாப்பான வாழ்க்கை பாதுகாப்பான எதிர்காலம் போன்றவற்றை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்.