புதுக்கோட்டை, பிப்.16 புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்துள்ள புதுக் கோட்டை விடுதி கிராமத்தைச் சேர்ந்த முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவ ணன். இவர் தனது 17வயதில் தந்தை பெரியார் அவர்களின் பொதுக்கூட்ட மேடைப்பேச்சைக் கேட்டு பகுத்தறிவுக் கருத்துகளை வளர்த்துக் கொண்டு திராவிடர் கழகத்தின் தன்னை இணைத்துக் கொண்டவர். கிளைக்கழகம் தொடங்கி மாவட்டத் தலைவர், மண்டலத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்து கழகத்திற்குத் தூணாக விளங்கியவர்.
வயது மூப்பின் காரணமாக 11.2.2024 அன்று மாலை மறைவுற்றார். இத்தகவலறிந்த திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவரது குடும்பத்தினருக்கு இரங் கல் செய்தி அனுப்பியதோடு தொலைப்பேசி யில் இராவ ணன் மகன் மற்றும் மகள்களோடு பேசி ஆறுதலும் கூறினார்.
இராவணன் அவர்களின் உடல் பொது மக்கள், நண்பர்கள், உறவினர்களின் இறுதி மரியாதைக்காக புதுக்கோட்டைவிடுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டிருந்தது. எந்த விதமான மூட நம்பிக்கை, சடங்கு களுமின்றி அவரது உடல் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
தலைமைக் கழகத்தின் சார்பில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக் குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகி யோருடன் மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் அமர்சிங், கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி, என்னாரெசு பிராட்லா, திருச்சி பேராசிரியர் சுப்பிரமணியன், காரைக் குடி மாவட்டத் தலைவர் வைகறை, புதுக் கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வை.சிதம்பரம், கழகப் பேச்சாளர்கள் முனை வர். அதிரடி க.அன்பழகன், இரா.பெரியார் செல்வன், பூவை.புலிகேசி, மாங்காடு மணி யரசன் உட்பட தோழர்கள் அய்யாவின் உட லுக்குக் கழகக் கொடி போர்த்தி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இறுதி நிகழ்வாக மாலையில் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. இதில் மேற்காணும் தோழர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், திமுகவின் சார்பில் கலைஞர் தமிழ்ச் சங்கத் தலைவர் த.சந்திரசேகரன், ஒன்றியச் செயலாளர்கள் தங்கமணி, தவ.பாஞ்சாலன், கறம்பக்காடு காமராசு, உள்ளிட்ட பொறுப் பாளர்களும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு அய்யா இராவணனுக்கும் தங்களுக் குமான தொடர்புகள், நிகழ்வுகள், வரலாறுகள், அவரது இயக்கப் பணிகளில் உள்ள சாதனை களை நினைவு கூர்ந்தார்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட வீரவணக்க அறிக்கையும் கூட்டத்தில் வாசித் துக் காண்பிக்கப்பட்டது. பின்னர் இறுதி ஊர்வலமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இராவணனின் மகன் மேகநாதனை முந்திக் கொண்டு தங்களது விருப்பத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தோழர்களிடம் சொல்லி விட்டு அய்யாவின் மகள்களான மீனா, நாகமணி, வான்மதி, செல்வா, ஈவெராமணி, முத்துச்செல்வி ஆகி யோர் பாடையைப் பிடித்து தந்தையின் உடலைச் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர். அதே போல் அவரது பேத்திகளில் ஒருவரான மதிவதனி இடுகாடுவரை வந்து மண் அள்ளிப் போட்டு மரியாதை செலுத்தினார்.
இதுபோன்ற செயல்களை ஆண்கள் மட்டும்தான் செய்வார்கள், செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் தவிர்த்து பெண்கள் முன் னுக்கு வந்து செய்த செயல்பாடுகளை துக்க நிகழ்விற்கு வந்த அனைவரும் வியந்து பாராட் டினார்கள்.
இந்நிகழ்வில் மேலும் அறந்தாங்கி மாவட் டச் செயலாளர் க.முத்து, மாவட்டப் பொறுப் பாளர்கள் வீரையா, சவுந்திரராசன், தேவேந் திரன், ப.மகாராசா, பகுத்தறிவு பாலு, மணி மாறன், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப் பாளர்கள் சு.கண்ணன், தர்மசேகர், ரெ.மு.தரும ராசு, செ.இராசேந்திரன், விடுதலைச் செய்தி யாளர் ம.மு.கண்ணன், பொன்னமராவதி அ.சர வணன், வீ.மாவலி, ஆசைத்தம்பி, பொன்மதி, கந்தர்வகோட்டை மூ.சேகர், சித்திரவேல், காரல்மார்க்ஸ், விராலிமலை ஓவியர் குழந்தைவேல், திருச்சி மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மு.சேகர் தலைமையில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் மா.ஆறு முகம், பாலகங்காதரன், கல்பாக்கம் இராமச் சந்திரன், இரா.விஜயராகவன், அறிவுவழிக் காணொலி சா.தாமோதரன், பேராவூரணி மந்திரமா தந்திரமா நீலகண்டன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவணன் அய்யாவின் உடலுக்கு மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.