கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை நடத்தி வைத்த இணையேற்பு விழா!

1 Min Read

கடந்த 3-2-2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் காத்தான்கடை என்.கே.பி. மகாலில் தேவன்பு- கிறிஸ்டினாள் இணையரின் மகள் தேஜாய் ஜெபகனி, சந்திரன் -சுமதி இணையரின் மகன் சஞ்சய் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. கல்பாக்கம் நகர தலைவர் ம. விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார். செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் நெல்லை சாலமன் ஒன்றிய பொறுப்பாளர்கள் ம.நரசிம்மன் க.குசன் ஆகியோர் முன்னிலையில், கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்கள் ஜாதி மத மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் அஜித் சிந்து ரமேஷ் மற்றும் அனைத்துக் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர். மணமகளுடைய தாத்தாவின் திருமணம் பெரியாரின் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *