எந்தவித மூட சடங்குகளும் இல்லாமல் உடல் எரியூட்டப்பட்டது
கண்ணந்தங்குடி, பிப்.16 திருச்சி பிகிறிறி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர், வடக்கு தெருவைச் சேர்ந்த திராவிடர் கழக தோழர் பொறியாளர் அரங்க.குமரவேலின் வாழ்விணை யர் கு.கலைச்செல்வி (வயது 49) உடல்நலக்குறைவால் 14-2-2024 அன்று காலை திருச்சியில் மறைவுற்றார்.
அன்று மாலை கண்ணந்தங்குடி கீழையூர் வடக்குத் தெரு அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலைச்செல்வி உடலுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை வைத்து இறுதி மரி யாதை செலுத்தினார். கலைச்செல்வியின் வாழ்
விணையர் பொறியாளர் ரெ.குமரவேல் மகன்
கு.அறிவாற்றல், மகள் கு.அறிவன்பு ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
படத்திறப்பு
மறைந்த கு.கலைச்செல்வி அவர்களின் படத்தினை திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயகுமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி.அன்பழகன், மாநில கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில இளைஞரணி துணைச் செய லாளர் இரா.வெற்றிகுமார், மாநில மாணவர் கழக செய லாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர் இரா.துரைராஜ், உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், உரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.இரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பேபி ரெ. இரமேஷ், தஞ்சை தெற்கு ஒன்றியத் துணைத் தலைவர் நா.வெங்கடேசன் பட்டுக்கோட்டை கழக மாவட்ட ப.க. தலைவர் இரா.காமராஜ், கண் ணந்தங்குடி கீழையூர் கிளை கழகத் தலைவர் இரா.செந் தில்குமார், வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் இரா.இராஜதுரை, உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கோ.இராமமூர்த்தி மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, கண் ணந்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சி.மாரிமுத்து, தஞ்சை மாநகராட்சி துணை மேயர், திமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட திமுக பொருளாளர் எல்.ஜி.அண்ணா, உரத்தநாடு நகர திமுக செயலாளர் கிருஷ்ணகுமார், புலவன்காடு ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் மணிவண்ணன், கலைச்செல்வி அமர்சிங், எடமேலையூர் கிளைக் கழக செயலாளர் ந. லெட்சுமணன், திருச்சி எச்.ஏ.பி.பி. நிறுவன ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
எந்தவித மூட சடங்குகளும் இல்லாமல் மு.கலைச் செல்வியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.30 மணி அளவில் கண்ணந்தங்குடி கீழையூர் இடு காட்டில் எரியூட்டப்பட்டது.