திராவிடர் கழகத்தின் மேனாள் பொதுக்குழு உறுப்பினரும், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவரு மான முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், ‘சுயமரியாதைச் சுடரொளி’ ஜி.கே.எம். என்று அன்புடன் அழைக்கப் பட்ட கோ.கிருஷ்ணமூர்த்தியின் முதலா மாண்டு நினைவுநாளில் (15.2.2024) அன்னாரின் மகள் கி.செல்வமணி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக (ரூ.1,000) விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவ ராசன் மூலமாக வழங்கினார்.