கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.10.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், பிரியங்கா உறுதி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வரலாறு தெரியாமல் திராவிட மாடல் அரசை தொடர்ந்து விமர்சிப்பதை தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலங்கானா அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ அறிமுகம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தற்காலிக வேலைகளில் எஸ்.சி., எஸ்.டி. ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு மனு.
தி டெலிகிராப்:
* ராகுல், கார்கேவுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு. ‘இந் தியா கூட்டணி’ அடுத்த கூட்டம் குறித்து ஆலோசனை
– குடந்தை கருணா